Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்

Go down

புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள் Empty புத்திர பாக்கியம் தரும் லட்சுமி நாராயண பெருமாள்

Post by oviya Sun Dec 07, 2014 3:27 pm

தீவனூர்

பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் பல அவதாரங்கள் எடுத்து உலக மக்களை உய்வித்துக் கொண்டே வருகிறான். ஒவ்வொருவர் சொல்லி லும் செயலிலும் கலந்து அவர்களை வழிநடத்திச் செல்லும் பெருமாளுக்கு லட்சுமி நாராயணன் என்கிற திருநாமமும் உண்டு. இந்த திருநாமத்தி லேயே ஏராளமான கோயில்கள் உள்ளன. அப்படித்தான் தீவனூர் என்கிற தலத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான். இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், கோயில் கட்டப்பட்ட காலத்தை உறுதியாகக் கூற முடியவில்லை. முன்பு ஆதிநாராயணப் பெருமாள் என்ற ழைக்கப்பட்ட இவர் தற்போது லட்சுமி நாராயணப் பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட நின்ற கோல ஆதிநாராயணப் பெருமாள் சிலை, சோழமன்னர்களின் கலைத்திறனையும் சுற்றுப் பிராகாரங்கள் பல்லவர்களின் கலைத்திறனையும் கொண்டதாகக் காணப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் சுவாமியின் கர்ப்பக் கிரகத்தில் பிரெஞ்சு மன்னன்  இரண்டாம் ஜான்பால் அடையாளம் பொறித்த டாலர் இருந்ததையும் பார்க்கும்போது பிரெஞ்சு படையெடுப்பின்போது இக்கோயில் சிதிலப்படுத்தப்பட்ட  விவரம் தெரிய வருகிறது. சுவாமி விக்ரகம் உடைக்கப்பட்டபோது கிராம மக்களும் முக்கியஸ்தர்களும் அதனை தடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து, கிராம  மக்கள் லட்சுமி நாராயண சுவாமியின் விக்ரகத்தை வழிபட்டு வந்திருக்கிறார்கள். 

அவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அறிய முயற்சியால் கோயிலை  புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். புதிதாக எந்த கல்தூணையும் செதுக்கவில்லை. பழைய கல்தூண்களை வடிவம் மாறாமல் அப்படியே பயன்படுத்தி பெரிய கோயிலாகக் கட்டியுள்ளனர். கோயிலில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது 21 அடி உயர கொடி மரம். அதன் முன்னே கருடாழ்வார் பெருமாளை வழிபடுவது போன்ற சிலை  நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் பின்புறம் பலிபீடம், துளசி மாடம் உள்ளன. முதலில் மகாமண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய  கல்தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் மனித உடலின் 
மூலாதாரமாக விளங்கும் ஸ்ரீசக்ரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைவரை இவ்வாறு ஆறு ஸ்ரீசக்ரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 

உள்ளே இருக்கும் அலங்கார  மண்டபத் தூண்களில் பல கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலம்புரி விநாயகர், சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர் ஆகிய உருவங்களை  தரிசிக்கலாம். அர்த்த மண்டப சுவர்களில் நடனமாடும் லவ-குசன் உருவங்கள், அதன் அருகில் ஆஞ்சநேயர் என்று பார்வைக்கு பவித்ரமாகத் தோன்று கின்றன. வாயிலின் மேற்புறத்தில் மூன்று மீன்கள் ஒன்றாகச் சேர்ந்தும் அதனருகே தனியாக மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவே பாண்டிய  மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதற்கு ஆதாரம். சொர்க்கவாசல் அருகிலுள்ள தூணில் மேலே ஸ்ரீசக்ரமும் நடுவில் சிவலிங்கமும் கீழே ஆஞ்சநேயர் உருவமும் உள்ளன. 

மற்றொரு தூணில் மிருதங் கம் வாசிக்கும் பெருமாள், சிங்கம், நடுவில் ஸ்ரீசக்ரம், கீழே யானை ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன. பெருமாளை வணங்கும் முருகப் பெரு மான், ஆண்டாள் உருவங்களும் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே அர்த்த மண்டபத்தில் ஆதிநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அ ருள்புரிய, கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக லட்சுமி நாராயண பெருமாள் பேரருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோயில் எதிரே 32 அடி உயர கல் தூணில் மாதாமாதம் திருவோண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. இக்கோயிலில் வைகாசி  மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தேரோட்டமும் உண்டு. 

புரட்டாசி மாதம் 1 முதல் 12ம்தேதி வரை பெருமாள் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சி பரவசமானது. உள்ளங்கால் முதல் உச்சிவரை சூரியன் தனது ஒளியால் பெருமாளை அபிஷேகம் செய்கிறான். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியவற்றுக்காக இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ராகு-கேது  தோஷம் போக்கும் பரிகாரத் தலம் இது. கோயில் முன்புறம் உள்ள வேம்பு, அரச மரத்தை திருமணமான பெண்கள் சுற்றிவந்தால் அவர்களுக்கு கு ழந்தை பாக்கியம் நிச்சயம் என்ற ஐதீகம் உள்ளது. செஞ்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்குள்ள பெருமாளை வழிபட்டுள்ளார். 

அவருக்கு ஆண் குழந்தை பிறந்த தால் அதற்கு நன்றிக்கடனாக ஒவ்வொரு பிரம்மோற்சவ தேரோட்டத்திலும் கலந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டு களாக மாசி மக தீர்த்தவாரிக்காக லட்சுமி நாராயணபெருமாள் (உற்சவர்) புதுச்சேரி வைத்திக் குப்பம் கடற்கரைக்கு சென்று நீராடித் திரும்புகிறார்.  கோயில் வளாகத்தில் தீர்த்தக் குளமும் புதிதாக வெட்டப்பட்டுள்ளது. கோயிலினுள் வில்வமரமும் வன்னிமரமும் உள்ளன. திண்டிவனம்-செஞ்சி சாலையில் 15வது கிலோ மீட்டரில் தீவனூர் உள்ளது. செஞ்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நிற்கும். மேலும்  விவரங்களுக்கு 94424 21577 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum