Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Go down

15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் Empty 15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Post by oviya on Sun Dec 07, 2014 3:29 pm

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்று கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை காலம் தொடங்கி விட்டதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இலவச தரிசனம் செய்ய சுமார் 17 மணி நேரமும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை 39 ஆயிரத்து, 86 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியிருந்தது. அறைகளுக்கு வெளியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்குவது மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் இன்று காலை 8 மணி முதல் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tirumala: Tirupati temple on Sunday kilamaiyana elumalaiyan meeting yesterday alaimotiyatu devotees. Summer holiday period has begun, the devotees to the temple of Tirupati elumalaiyan is increasing day by day.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum