Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை

Go down

தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை Empty தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை

Post by oviya Wed Dec 10, 2014 1:00 pm

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக ஆறு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியானவர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 12ம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பதாரிகள் பொருத்தமானவர்களா என்பது குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் தேர்தல் ஆணையாளருக்கு தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்பிற்கு அழைத்து தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

2010ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்த போதிலும் 401118 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள நடமாடும் சேவை ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் 534,150 பேர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் அதில் 35,000 பேருக்கு அடையாள அட்டை இல்லாதுள்ளது. இதில் அதிகமானவர்கள் பெருந்தோட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 35,000 தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க விசேட நடமாடும் சேவைகளை நடாத்தவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டம் திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நுவரெலியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஜ்.ஏ.எஸ்.பெர்ணாண்டோ, ஹட்டன் மனிதவள பொறுப்பின் அத்தியட்சகர் நலீன் த சில்வா, பிரதேச செயலாளர்கள், தோட்ட முகாமையாளர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொடர்ந்து விளக்கமளித்த நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டீ.பீ.ஜீ.குமாரசிரி, நுவரெலியா மாவட்டத்தில் 35,000 பேர் வாக்காளர் பட்டியலில், தமது பெயரை பதிவு
செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்படாமல் உள்ளது. எனவே அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்காக தேர்தல் திணைக்களம், பெப்ரல் அமைப்பு, இலங்கை ஆட்பதிவு திணைக்களம் ஆகியன இணைந்து நடமாடும் சேவைகளை நுவரெலியா மாவட்டம் முழுவதிலும் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளடக்கப்படும் முகமாக இந்த நடமாடும் சேவை டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் டிசெம்பர் 16ஆம் திகதி வரை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இதன்போது அனைவருக்கும் இலவசமாக அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்கான புகைப்படம் முத்திரை கட்டணம் ஆகிய ஏற்பாடுகளை பெப்ரல் அமைப்பு இலவசமாக மேற்கொள்கின்றது. இந்த நடமாடும் சேவைகள் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளன.

11.12.2014 அன்று சென் ஜோசப் ஆரம்ப பாடசாலை மஸ்கெலியா, டிக்கோயா நகர மண்டபம் டிக்கோயா, 12.12.2014 அன்று கினிகத்தேன ஆரம்ப பாடசாலை கினிகத்தேனை, ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயம் கொட்டகலை, 13.12.2014 அன்று மாவட்ட செயலகம் நுவரெலியா, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபம் டயகம, 14.12.2014 அன்று மாவட்ட செயலகம் வலப்பனை, ஆரம்ப பாடசாலை இராகலை, 15.12.2014 அன்று மாவட்ட செயலகம் ஹங்குரன்கெத்த, ஹேவாஹெட்ட வாசிகசாலை ஹேவாஹெட்ட, 16.12.2014 அன்று மாவட்ட செயலகம் கொத்மலை, மல்தெனிய விவசாய மத்திய நிலையம் மல்தெனிய ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இந்த இடங்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர் பட்டியலில் பெயர் பதிந்தவர்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நடமாடும் சேவையில் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள் நிறம் மாறிய அல்லது தரவுகள் அழிந்து போன அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அடடையை பெற்றுக் கொள்ள முடியும்.

காணாமல் போன அடையாள அட்டைக்கு பதிலாக அதன் நகல் பிரதியை பெற்றுக் கொள்ள முடியும்.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு நடமாடும் சேவை இடம்பெறும் திகதிக்கு முன்னதாக தவறாது உங்கள் கிராம அடையாள அட்டைக்கு பதிலாக அதன் நகல் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு நடமாடும் சேவை இடம்பெறும் திகதிக்கு முன்னதாக தவறாது உங்கள் கிராம அலுவலகரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஐந்து வர்ணப் புகைப்படங்கள், பிறப்பு சான்றிதழின் மூலப் பிரதியுடன் நகல் பிரதி, 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகள் (இவை அனைத்தும் இலவசமாக பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது)

பிறப்பு சான்றிதழ் அற்றவர்கள் உத்தேச வயது சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தேடப்பட்டமைக்கான பெறுபேற்று குறிப்பும் சத்தியக் கடதாசியும் மற்றும் கீழ் கண்ட ஆவணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேல்

• பாடசாலை விடுகைப்பத்திரம்
• ஞானஸ்னான சான்றிதழ் அல்லது திருமுழுக்கு சான்றிதழ்
• விண்ணப்பதாரியின் (ஆண்-பெண்) பிறந்த திகதி குறிப்பிடப்பட்டுள்ள பிள்ளையின் பிறப்பு சான்றிதழ்.
• இலங்கை குடியுரிமை சான்றிதழ் (பிறந்த திகதி குறிப்பிடப்பட்டிருப்பின்)
• வெளிநாட்டு பயணக்கடவுச் சீட்டு
• பிறப்பு நிகழ்ந்தவுடன் கணிக்கப்பட்ட ஜாதகக் குறிப்பேடு ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை
» தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் முடிவு
» இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி
» ஐஸ்வர்யங்கள் வாரி வழங்கும் ஐயனார்
» எட்டுக் கரங்களாலும் அருள்வாரி வழங்கும் அன்னை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum