Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா கோலாகல தொடக்கம்

Go down

சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா கோலாகல தொடக்கம் Empty சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா கோலாகல தொடக்கம்

Post by oviya on Wed Dec 10, 2014 1:14 pm

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கோமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 7.35 மணிக்கு கொடிப்பட்டத்தை சரவண பட்டர் ஏற்றினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

முதல் நாளான நேற்று காலை கனகதண்டிகை பல்லக்கில் அம்பாள் வீதி உலாவும், மாலை கோயிலில் இருந்து அம்பாள் 1ஆம் திருநாள் மண்டகப்படி கட்டிடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதன்பிறகு இரவு தங்க சப்பரத்தில் வீதிஉலாவும் நடந்தது. 23ஆம் தேதி வரை 12 நாள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து, காலை கோயில் சார்பிலும், மாலையில் மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும்.

விழாவின் 9வது நாளான வரும் 20ஆம் தேதி காலை 9 மணிக்கு கோமதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக்காட்சி ஜூலை 22ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை கோயிலின் உட்பிரகார மேற்கு வீதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருக்கும் நிகழ்ச்சியும், மாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து அம்பாள் மீண்டும் தபசு மண்டபத்தில் தவமிருக்கச் சென்றதும், இரவு 12 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடக்கிறது.

விழாவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, கோயில் துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் இசக்கியப்பன், டிஎஸ்பி மாதவன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, சைவ சித்தாந்த சபை தலைவர் ஆவுடையப்பன், கோயில் கண்காணிப்பாளர் முருகானந்தம், அலுவலர்கள் ஆவுடையப்பன், சுந்தரய்யா, வக்கீல்கள் சுப்பையா, மாதவராம், புஷ்பராஜ், தொழிலதிபர்கள் சின்னசாமி, திவ்யா ரெங்கன், ராமகிருஷ்ணன், சங்கர சுப்பிரமணியன், பிச்சையா, சங்கரன், குமரன், கார்த்திகேயன், சங்கரநாராயணன், எஸ்ஆர்எல் கண்ணன், கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum