Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வறுமைத் துன்பங்கள் விலக்கும் மகாதேவர்

Go down

வறுமைத் துன்பங்கள் விலக்கும் மகாதேவர் Empty வறுமைத் துன்பங்கள் விலக்கும் மகாதேவர்

Post by oviya Wed Dec 10, 2014 1:15 pm

அந்த அழகிய கிராமத்திற்கு நெல்வேலி என்று பெயர். வயல்வெளிகள் சூழ்ந்த அழகிய கிராமம். செந்நெல் செழிக்கும் விவசாய பூமி. வயல்களில் பொன் நெற்கதிர்கள் தலைசாய்த்து அறுவடைக்காக காத்திருந்தன. கூடவே விவசாயிகளுக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆமாம், முந்தினநாள் வயல் நிறைய, மனம் நிறைய விளைந்து தொங்கும் நெல்மணிகள், மறுநாள் பார்த்தால் ஒன்றுகூட இருக்காது! இதே சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்தபோது திகைப்பு விலகி, அந்த மர்மத்தை அறியும் ஆவலும் நெல்மணிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு மேலோங்கின. ஆகவே நெல் வயல்களுக்கு மாறிமாறி காவல் இருந்தனர். அப்போது ஓர் இரவு காளைமாடு ஒன்று வந்து நெற்கதிர்களை சாப்பிட்டுச் சென்றது!

திகைத்துப்போன மக்கள் காளையை பின்தொடர்ந்தனர். காளையோ ராஜநடை போட்டபடி நெல்வேலி மகாதேவர் கோயிலுக்குள் சென்று ஈசனை நோக்கி படுத்துக் கொண்டது. உடனே, பளிச்சென்று கற்சிலையாகவும் மாறியது! ஊரார் அப்படியே அதிசயத்துப் போயினர். காளை விழுந்து (படுத்து) கற்சிலையாக மாறியதால் அன்று முதல் Ôகாளை விழுந்தார் கோயில்Õ என்ற பெயரும் ஏற்பட்டது. பின்பு எல்லோரும் கலந்தாலோசித்து காளையின் காதை சிறிதளவு பின்னப்படுத்தினர். அதற்குப் பிறகு நெற்பயிர்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. இன்றைக்கும் துண்டித்த காது கொண்டவராகவே இத்தல நந்தீஸ்வரர் காட்சி தருகிறார்.

நெல்வேலி கிராமத்தைச் சுற்றிலும் உள்ள மக்களின் ஒரே சிவத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. இத்தல நாயகர் பக்தர்களின் குறைகளை நீக்கி வரங்களை அள்ளித்தரும் அமுதசுரபியாகவே திகழ்கிறார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோயில் இது. மூலவர் மகாதேவர், லிங்கத் திருமேனியில் வடக்கு நோக்கி சற்றே சாய்ந்த நிலையில் அருள்கிறார். மகாதேவருக்கு Ôஜல தாரைÕ (அபிஷேகம்) செய்தால் உடனே பலனை தருவார் என்கிறார்கள், பக்தர்கள். அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்து மகிழ்வித்த ஈசன் லிங்க வடிவில் இங்கு காட்சி கொண்ட தாக ஐதீகமும் உண்டு.

சிவனை நோக்கியபடி அமர்ந்திருக்கும் நந்தியம் பெருமான் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். கோயில் வளாகத்தில், ‘ஹரியும் சிவனும் ஒன்று’ என்ற தத்து வத்திற்கிணங்க மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். ஆறடி உயர பிரமாண்ட தோற்றம். சங்கு, சக்கரம், கதை தரித்து, Ôசாந்தாஹாரம்Õ என்ற சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறார். கணபதி, கிருஷ்ணர், ஐயப்பன் சந்நதிகளும் கோயிலுக்கு வெளியே பூதஸ்தான், நாகராஜர் சந்நதிகளும் அமைந்துள் ளன. தல விருட்சம், வில்வ மரம்.

Ôவிஸ்வேஸ்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர ஜடாதராய
கற்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹதாய நமசிவாய

-என்று வறுமை, துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மக்களை காப்பவர். மகாதேவர் கோயிலில் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடக்கிறது. மாதம்தோறும் பிரதோஷம், திருவிளக்கு பூஜையும் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, கிருஷ்ணர் பட்டாபிஷேகம் போன்ற விழாக்களும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மகாதேவரின் நிவேதன பிரசாதத்தை உட்கொண்டால் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் ஐதீகம். நந்தி தேவருக்கு உளுந்தை நிவேதித்தால் மனம் அமைதி பெறும். மகாதேவருக்கு ஜலதாரை செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

விஷ்ணுவிற்கு பௌர்ணமி அன்று பால் பாயசத்தை நிவேதித்தால் களத்திர தோஷம் நீங்கும். இக்கோயில் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு, 15.7.2013 அன்று மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவும் மேலதிக தகவல் பெறவும் 9487800400 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மார்த்தாண்டத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum