Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Go down

திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் Empty திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Post by oviya on Wed Dec 10, 2014 1:16 pm

திருமலை: திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 528 பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை 48 ஆயிரத்து 528 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி வெளியே நீண்ட தூரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

இதனால், இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும், திவ்ய தரிசனத்துக்கு 14 அறைகள் நிரம்பி நாராயண கிரி தோட்டம் வரை பக்தர்கள் காத்திருந்ததால் 12 மணி நேரமும் ஆனது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவது பிற்பகல் 3 மணியுடன் நிறுத்தப்பட்டது. இது குறித்து கோயில் துணை செயல் அலுவலர் சின்னகாருரமணா கூறுகையில், சனி, ஞாயிறு என்பதால் ஏழுமலையானை தரிசிக்க 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அன்ன பிரசாதங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது’’ என்றார். இஸ்ரோ தலைவர் தரிசனம்: விண்வெளியில் பி.எஸ்.எல்.வி.சி-22 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ளது. இதை யொட்டி திருப்பதியில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum