Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


இனியொரு மாதரை மனதாலும் நினையான்

Go down

இனியொரு மாதரை மனதாலும் நினையான் Empty இனியொரு மாதரை மனதாலும் நினையான்

Post by oviya on Wed Dec 10, 2014 1:41 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - அம்பாசமுத்திரம்

புரட்டாசி மாதத்தில் கருட சேவை காண்பது பெரும் புண்ணியமும் பாக்கியமும் ஆகும். அந்த கருட சேவையை நெல்லை அம்பா சமுத்திரத்தில் அமைந்துள்ள கோயிலில் குடி கொண்டிருக்கும் புருஷோத்தமப் பெருமாள் கோயிலில் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு. ஏனெனில், சக்கரத்தாழ்வானே, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் மானுட வடிவு தாங்கி கருடனை ஆராதித்து செல்கின்றார் என்கிறார் கபில முனிவர்.

‘‘பொங்கி நீராடி கன்னிமந்த நாளதனிலே
விசயமங்கையாளன் சக்கரத்தண்ணல்
மானுட வடிவேந்தி வந்திருந்தாராதிக்குந்
தலமிப் புருடோத்தமனம்பல மே யதனில்
பருந்தமர் சேவை சாதிப்பக் காண நிற்பவே’’

-என்ற பாடலில் பருந்தமர் என்ற சொல், கருடசேவையைக் குறிப்பதாகும். சக்கரத்தாழ்வார் தம்மை தொழுவார்க்கு, எதிரிகள் பயமும் இல்லை, யம பயமும் இல்லை. இத்திருத்தலத்தில் புருஷோத்தமப் பெருமாள், தாயார் அலர்மேலு மங்கையுடன் கருடன்மேல் அமர்ந்தே சேவை சாதிக்கின்றார். இதயப் பீடை நோயுடையோரும் இதய நோய் ஏதும் வாராது விலக வேணுமென்ற எண்ணம் கொண்டோரும் கண்டிப்பாகத் தொழ வேண்டிய திருத் தலமிது என்கின்றார் காகபுஜண்டர்.

‘‘இதயக் கமலத் தண்டாது பீடை
யேதுஞ் சொன்னோம் - புருடோத்தமரின்
மருப்பாதம் மலர்நிற்க கண்டு தொழுதார்க்கு
அலங்கோலமா மல்லலிலையே’’

-என்ற வரிகள் ஆராயத்தக்கவை. கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்த கோலத்தில் புருஷோத்தமர் அருள்பாலிக்க இடது கையில், திருமகளின் மலர்ப்பாதம் தங்க, (மருப்பாதம் என்றால் திருமகளின் மலர்ப்பாதம் என்று பொருள்படுகின்றது) இங்கு இதனை நெஞ்சார உருகித் தொழுவார் தமக்கு இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் வாராது, வந்துற்ற பிணியும் நீங்கப் பெறுவர் என்பதாம்.

‘‘நித்யாரூட கருட சேவையானை
சேவிப்போர் தம் இடும்பை
யகலுமன்றி சேராத திரவியம்
தானே சேரும் ஆஸ்தி மிதக்குமவர்
தம் மனைதனிலே’’

-என்றார் சிவவாக்கியர். சுவாமி கருடாழ்வார் மேல் காட்சி தருவதால், சித்தர் பெருமக்கள் இவரை ‘நித்ய கருட சேவை பெருமாள்’ என்று போற்றுகின் றனர். இத்தலத்தில் மாதவனாம் மகாவிஷ்ணு ஒரு தாயாருடன் மட்டும் காட்சி தருவதனால், இவரை ‘‘புருஷோத்தமன்’’ என்றான் வியாச முனிவர். இவருக்கு ‘‘ஏகபத்தினி விரதன்’’ என்றும் பெயர் வழங்குகின்றது. புதுமணத் தம்பதியர் இக்கோயிலில் புகுந்து ஒருமித்த மனத்துடன், சிரத்தையுடன் புருஷோத்தமரை சரணடைந்தால் கணவன், மனைவியைத் தவிர பிற மங்கையை ஒரு போதும் எண்ணமாட்டான் என்கின்றார் கொங்கணர்.

‘‘சப்த சிரமேந்திய வெண்ணரவத்தான்
அடி அமர் அச்சுதனை அண்டிய
பெண்டிரென்றுஞ் சுமங்கலியாம்
பிறமனை நோக்க பெருமணாளனைப் பெற
வழி செய்வான் வைகுந்தனே’’

-என்றார். இங்குள்ள பெருமாளை ஆதிசேஷன் தன் ஏழு தலைகளை ஒரு குடையைப் போலக் குவித்து வணங்கும் கோலம். இத்திருக்கோலமுடைய கோகுலவாணனை அண்டிய பெண்டிர் எப்பிறப்பிலும் சுமங்கலியாம். அது மட்டும் அல்லாது பிறர் மனை நோக்கா பேராண்மை உடையானை கணவனாகக் கொள்வார் என்றார் சித்தர். ஒரு குடும்ப பெண்ணிற்கு இதைவிட இன்பமான செய்தி வேறு இருக்க முடியுமா? தன் கணவன் என்றும் தன் நினைவுடன் இருப்பதை ஏற்காத பெண் பூமியில் இருக்க முடியாது அன்றோ? இதனை அருள்புரிபவர் இந்த புருஷோத்தமரே. பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் நித்யானந்த மூர்த்தி என்று புளகாங்கிதம் கொள்கின்றார் சித்தர்.

துவாபரயுகத்தில், வசிஷ்டர் பெருமகனார் இக்கோயிலுக்கு வந்து தொழுது பின் சில காலம் தங்கி இறைவனை வழிபட்டு நின்றார். அனுதினமும் வான்வழி சென்று கங்கை நதியின் புனித நீரை எடுத்து வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்து பூஜை புரிந்து வந்தார். ஒருமுறை ஆழ்ந்த தியானத் திலிருந்தமையால், நீரைக்கொண்டு வரும் வேளை பிசகிற்று. மனம் வருந்தி கண்ணீர் மல்கிய ரிஷியின் துயர்துடைக்க, புருஷோத்தமர் நேரில் தோன்றி, ஆசி ஈந்து தாமிரவருணி நதிக்கரையில் ஒரு இடத்தில் கங்கையே வருக என்றார். பெரும் ஊற்றெடுத்து பொங்கிய கங்கை நீரை எடுத்து மகரிஷி புருஷோத்தமப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்தார். அப்படி வைகுந்தவாசனால் தோற்றுவிக்கப்பட்டதே இத்தலத்தின் புண்ணிய தீர்த்தமாம் ‘பொங்கிக்கரை தீர்த் தம்’. இதனை அகத்தியர்,

‘‘ரகு குல குரு நின்ற தலத்து
தோன்றிய மாதவன், பொங்கி
தீர்த்த பொய்கைதமை சிவச்சிர
முறை நீராய் பெருக்கெடுக்கச்
செய்தனனே’’

-என்ற வாக்கால் உணரலாம். பெருமாள் கோயில்களில் குடி கொண்டுள்ள சுவாமிக்கு சங்கு சக்கரம் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள புருஷோத்தமருக்கு சங்கும், சக்கரமும் இரண்டிரண்டாக இருப்பது அபூர்வம் ஆகும். ஆம், இரண்டு சக்கரங்கள், இரண்டு சங்குகளுடன் பெருமாள் இத்தலத்தில் காட்சி தருகின்றார். சங்கு, செல்வத்தின் வடிவம். சக்கரம், ஆற்றலின் வடிவம். பெரும் பணம் சம்பாதித்தாலும், அதனை அடக்கி, நல் வழியில் வாழ்வு அளித்து கீர்த்தி, ஆயுள், ஆரோக்கியம், குடும்ப மேன்மை என அனைத்து ஆற்றல்களையும் தருபவர் இந்த மூர்த்தி.

இத்தகைய பெருமாள் காணக்கிடைப்பது அபூர்வம் தானே! பெருமாள் எட்டுக் கரங்களுடன் இருப்பது மெய் சிலிர்க்க வைக்கின்றது. இவரை ‘‘அஷ்டபுயகர பெருமாள்’’ என்றும் சித்தர்கள் கொண்டாடு கின்றனர். நந்தி தேவர் தமது நூலில்,

‘‘கடனாளியான பேரை தனவானென
பேச வைப்பான் - மேதினியில்
இவ்வட்டபுய கரத்தானாலாகததேது
செல்வச் சிறப்பை எட்டலாமே யிவனை
சரணஞ் செய்யவே’ -என்றார்.

ஏவல், சூனியம், திருஷ்டி, பிற தோஷங்களினால் வருந்தும் மாந்தரைக் காக்க நரசிம்ம பாதம் இங்குண்டு. இதனை பாம்பாட்டியார்,

‘‘சிங்கமுகத்தான் திருவடி
தன்னாலகலும் வைரியர் வைத்த
வைப்பே - சூதும் வாதுஞ் செய்தார்
தம்மை வாழவொட்டான் நரசிங்கனே.
இப்பாதந் தொழுவார் வாழ்வாங்கு வாழ்வர்
திண்ணமது சொன்னோமே’’

-என்றார். இங்கு பெருமாள் மடியில் மகாலட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் இருப்பதினால் நவராத்திரி காலத்தில் திருமகளை தொழுவார் தம் மாங்கல்ய பலம் கூடும், சர்வ வியாதி நிவாரணம் ஆகும், உயர்பதவி கிட்டும் என்றார் கபிலர்.

‘‘இந்திர விமானத்தடி புன்னை விருட்சங்
கொண்டானை - வருணியுத்திர கரை
வீற்றிருப்பானை அண்டிய பேருக்கு
இம்மையில் இல்லறமது இனிதாகுமே.
பீடையொடு பிணியறுபடுமே - மேலான
பணியுஞ் சேர்ந்து சுகபோகங்கிட்டுமே’’

-இத்தலத்தின் விருட்சம் புன்னைமரம். பெருமாள் மேல் நிற்கும் விமானம் இந்திர விமானம் ஆகும். இப்படி தேவர்கள் கொண்டாடும் தலத்துறை பெ ருமாளை சரணடைய எல்லா சம்பத்துகளும் கூடும் என்பதில் ஐயமில்லை. திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவில், அம்பாசமுத்திரத்தில் இக்கோயில் உள்ளது. அகத்தீஸ்வரர் கோயில் பேருந்து நிலையத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum