Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கும்பாபிஷேகக் கொண்டாட்டம்

Go down

கும்பாபிஷேகக் கொண்டாட்டம் Empty கும்பாபிஷேகக் கொண்டாட்டம்

Post by oviya on Wed Dec 10, 2014 1:44 pm

சென்னை-மயிலாப்பூர் ஆஞ்சநேயர் திருக்கோயில்

சென்னை, மயிலாப்பூரில் தண்ணீர்தொட்டி என்ற பகுதியில் இருக்கிறது ஆஞ்சநேயர் திருக்கோயில். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த இடத்தில் கோயில் கொண்டுள்ள அனுமன் தன் பக்தர்களின் நெருக்கடிகளை நீக்கி ஆறுதல் அளிக்கிறார். கருவறையில் கம்பீரமாய் நிற்கும் அனுமனின் ஒரு கரம் கதாயுதம் ஏந்தியிருக்கிறது. மற்றொரு கரம் அபயஹஸ்தம் காட்டி சௌகந்திகா மலருடன் அருள்கிறது. அவரது வால் சுழன்று தலைக்கு மேலாக இருக்கிறது. முகம் திரும்பிய நிலையில் உள்ள இந்த அனுமனின் உருவத்தை வட பாரதத்தில் ‘மங்களிகா ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள். இவரை வணங்கினால் மங்களங்கள் யாவும் கிட்டும். மனநலம் பாதித்தவர்கள் குணமடைகிறார்கள்; மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள்; திருமணத் தடை விலகுகிறது என்பது அனுபவபூர்வமான நம்பிக்கை. தற்போது கோயில் புதுப்பிக்கப்பட்டு 8.9.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மாம்பட்டு சுயம்புநாதேஸ்வரர் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு கிராமத்தில் சுயம்பு மூர்த்தியாய் எழுந் தருளியி ருக்கிறார் சுயம்பு நாதேஸ்வரர். அன்னை, பெரியநாயகி. சுயம்புநாதர் நம்முள் மறைந்தி ருக்கும் இசை, ஓவியம், கவிதை இயற்றுதல் போன்ற நுண்ணிய திறமைகளை வெளிக் கொண்டு வர அருள்கிறார். அன்னை பெரிய நாயகி குடும்ப ஒற்றுமையை வலுவாக்கி குலம் தழைக்க அருள்கிறாள். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் சிவநேசர்களால் சீர் செய்யப்பட்டு 16.9.2013 அன்று கும்பாபிஷேகம் காணவிருக்கிறது. ஆலயத் தொடர்புக்கு: 9840053289.

திருவீழிமிழலை வீழிநாதர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலையில் இருக்கிறது சுந்தரகுசாம்பிகை சமேத வீழிநாத சுவாமி திருக்கோயில். பிரம்மா, திருமால், சுவேத கேது, சிபிச் சக்கரவர்த்தி, ரதிதேவி, காமதேனு எனப் பலரும் தொழுத ஈசன் இவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தல நாதனைப் பாடிப் பணிந்துள்ளார்கள். மகாவிஷ்ணு இத்தல ஈசனை வணங்கி, ஆயிரம் தாமரைகளால் பூஜித்து சக்ராயுதத்தை பெற்றதாக தல வரலாறு பேசுகிறது. இத்தலத்தில் 25 புண்ணிய தீர்த்தங்கள் பக்தர்களின் சாபம் நீக்கி அருள்கின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 11.9.2013 அன்று நடைபெற உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9791232555.

- எஸ்.ஆர்.செந்தில்குமார்

திருக்காட்டுப்பள்ளி ஆஞ்சநேயர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருக்கிறது கோட்டை வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை விஜய நகரப் பேரரசின் ராஜகுருவான வியாஸராயர் நிர்மாணித்தார் என்கிறார்கள். இந்த அனுமனைப் பணிய தீய சக்திகளால் ஏற்படும் இன்னல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். கல்யாண வரம் கிடைக்கும் என்பதெல்லாம் பக்தர்களின் அனுபவம். இந்த ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகம் 8.9.2013 அன்று நடைபெற உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9965749950.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum