Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அழகையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளித் தரும் ஆண்டவன்

Go down

அழகையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளித் தரும் ஆண்டவன் Empty அழகையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளித் தரும் ஆண்டவன்

Post by oviya on Wed Dec 10, 2014 1:47 pm

தான் அழகாக இருக்க வேண்டும். பிறர் தம் அழகை பாராட்ட வேண்டும் என எண்ணுபவர்கள் இந்தக் கோயிலை அடைந்து வழிபாடு செய்தால், தக்க பலனும் அழகும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு பொருளாதார மேன்மை வந்தால், கவர்ச்சி, அழகு போன்றன கூடவே வரும். எனவே இந்த இறைவன்-இறைவியைத் தொழுதக்கால், அழகுடன் இளமை, ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும் என்கிறார் அகத்தியர். காவிரி ஆற்றின் தென்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த சிவபெருமானுக்கு வேதபுரீஸ்வரர் எனப் பெயரிட்டவர் அகத்தியப் பெருமானார்.

‘‘வேதங்கள் தாந்தொழுதேத்திய மூர்த்தி.
வானோடுந் தேரை புவியழுத்திய புண்ணிய
தீரமிது சுந்தரனிவனை தொழுதக்கால்
வச்சிரமான தேகமொடு பேரழகுஞ்
சித்திக்குமென்றோமே.’’

வேதங்கள் தொழுத மூர்த்தி என்பதினால் மூலவருக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். அகத்தியப் பெருமான் இத்தலத்தில் சிவபூஜை புரிந்து வந்தார். அப்போது ஊர்த்துவரதன் என்ற மன்னன் தனது தேரை வான்வெளியில் செலுத்தி வந்தான். இத்தலத்தைக் கடக்கும்போது தொடர்ந்து தேர் செல்ல இயலாது அழுந்திய காரணத்தினால் இத்தலம் தேர் அழுந்தூர் என்று ஆனது. திருவழுந்தூர் பூமி தேரெழுந்தூரானது, அகத்தியர் தம் சிவபூஜை மகிமையாலேயே. இத்திருத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. வேதம் பயில எண்ணுவோரும், பயில்வோரும், வேதப் பொருளை உணர எண்ணுவோரும், இங்கே நீராடினால் மிகுந்த சிறப்பைப் பெறலாம். வியாச முனிவர் வேதங்களைத் தொகுக்க முனையும் முன் இத்தலத்திற்கு வந்து வேத தீர்த்தத்தில் நீராடி, பின் வேதபுரீஸ்வரரை வணங்கிவிட்டுதான் செய்தார் என்கிறார் ஜமதக்னி எனும் முனிவர்.

‘‘வேதந் தன்னையுவிக்கோது முன்
வியாசமுனியும் புகுந்த பொய்கை
கம்ப நாட்டாழ்வானும் மூழ்கிக் களித்த
ருளெய்திய பொய்கை அயனுமி
டையறுந் நீராடி நின்ற இவ்வேத
பொய்கை தமக்கு நிகருண்டோ’’

-என்ற பாடல் போற்றத்தக்கது. இது கங்கை நதிக்கு இணையானது. கம்பராமாயணம் இவ்வளவு பிரசித்தியாக இப்பொய்கையே அருளியது. வேதங்களைத் தொகுத்து நின்ற வேதவியாசர் நீராடி நின்ற புண்ணிய தீர்த்தம் இது. பிரம்மன், மகாவிஷ்ணு உள்ளிட்ட மூர்த்தியரும் நீராடிப் பலன் பெற்ற பொய்கை இது.
மிகவும் தொன்மை வாய்ந்த இந்தக் கோயிலின் தல விருட்சங்கள் வில்வம், மற்றும் சந்தனம் ஆகும்.

‘‘செல்வம் மிகுத்திட ரோகம் பல
விலகிட வாழுந் நாளுமெண்ணிக்
கையில் பெருகிடவே தொழுது
நிற்பீர் பில்வ விருட்சமது தனை
யே பிறிதுவொரு விருட்சமது
தேய்த்து வர நறுமணங் கமழ
மேனி மெருகேறி பேரழுகும்
வனப்புமேர கருவாகுமே’’

-என்றார் கருவூரார். பெரும் பொருள் சேர்க்கையும், நோயற்ற உடலும், நீண்ட வாழ்நாளும் பெற ஏதுவாகும், இங்குள்ள வில்வ மரம் தன்னை சிரத்தையோடு தொழுவார் தமக்கே. இன்னொரு தலவிருட்சமான சந்தன மரத்தை முறைப்படி விரதமிருந்து தொழுதுவர உடல் அழகு, கவர்ச்சி, மேனி மினுமினுப்பு போன்றன கூடும் என்கிறார் கருவூர் சித்தர். அன்னை அழகுநாச்சியாராகவும், சவுந்தராம்பிகையாகவும் இவ்விரு மரங்களிலும் அரூபமாக குடி கொண்டு அருள்பாலிப்பதே இதற்கு காரணம். மும்மூர்த்தியரில் அழகு மிகுந்த மகாவிஷ்ணு இந்த சவுந்கரநாயகியின் சகோதரன். சவுந்தராம்பிகை அனுக்கிரகத்தினாலேயே செல்வச் சீமானாக உருவெடுக்க, திருமகளாம் மகாலட்சுமியை தன் மார்பில் கொண்டான் மஹாவிஷ்ணு. அருள்மிகு சவுந்தராம்பிகையை கைதொழுவார் சகல மேன்மைகளும், பசு, மனை, நிலம், ரதம், சொர்ணம், நவரத்னமணிகள், பீதாம்பரம் போன்ற ஐஸ்வர்யங்களுடன் அழகிய வாழ்க்கைத் துணை பெற்று, நீண்ட ஆயுளுடனும், நற்சந்தானம் கொண்டு வாழ்வர் என அகத்தியர் பேசுகிறார்.

‘‘குறையாத அழகும், சோர்விலா பேச்சும், வற்றாத செல்வமும் பொன்னுந் நவமணியும். ராசர் தம் மனைக்கீடான குடிலும், பொன்னே விளையும் புவியும், நற்பேறும் பெற்றே இனிதொரு நீடு வாழ யன்னைச் சௌந்திராம்பிகை சரணஞ் செய்வீரே’’ என்ற பாடல், நமக்கு தெய்வ நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றது அன்றோ! இந்த கலியுலகில், பொருள் ஒன்றையே பிரதானமாக மாந்தர் போற்றுவர். யதார்த்த நிலையும் இதுதான். இந்தக் கோயிலின் மாதா, அருள்மிகு சவுந்தராம்பிகை, வேண்டும் பொருளை குறைவின்றி கொடுப்பவள். நோயே வராது தடுப்பவள். இவளை சரணடைந்து நாம் நம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வோம்.

‘‘வானுங் கிரியுமிணையிலை இவ்
வம்பலந் தனக்கே‘’

-என்றான் போகர். வானமும், மலையும் இந்தக் கோயிலுக்கு இணையற்றது என்ற பாடல் இத்திருக்கோயிலின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது.
சித்திரா பவுர்ணமி அன்று குபேர பகவான் தன் இரு பத்தினியராம் கனக லட்சுமி, சித்திரலேகா தாயார்களுடன் எழுந்தருளி இங்குள்ள சிவனை பூஜிக்கின்றார். வருணன், யமன் போன்றோரும் இத்திதியில் இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை வந்து தொழுகின்றனர் என்கின்றார் ஜமதக்னி முனிவர்.

‘‘செல்வத்து ராசனுந் தம் தேவியரிருவ
ருடனே வந்து தொழுந் திருமூர்த்தி
யிவனை காலனும் வருணனுமாராதிக்க
மேடமுழுமதி கண்டோமே’’

-என்றார். மேற்கு திக்கு நோக்கி இருக்கும் இச்சிவன் கோயிலில் சூரிய பகவான் தன் தேவியர்களோடு மாசி மாதம் 23, 24, 25 தேதிகளில் அஸ்தமனத்திற்கு முன் தொழுகின்றார் என்கிறார் கபிலர்.

‘‘கடைவார முன் மூன்றே நாள்
அத்தமன வேளை கதிரவனுந்தந்
தேவியருடனே வந்து தொழுந் தேவனை
கண்டோமே’’

-என்றார். இறைவன் சுயம்பு மூர்த்தி. இங்கு விநாயகப் பெருமான், திருஞான சம்பந்த சுவாமிக்கு காட்சி தந்தவர். எல்லா சந்தேகங் களுக்கும் விடையாக விளங்கும் கணபதி இவர். சம்பந்தப் பெருமானுக்கு இக்கோயிலை காட்டி நின்றார். எனவே இந்த விநாயகரை ‘‘ஞான சம்பந்த விநாயகர்’’ என்றே தேவர்கள் வழிபட்டனர். தேர்வு எழுதும் முன் இவரை மனதால் தியானித்து தேர்வு எழுதினால், நேர்முகத் தேர்வில் பங்குகொண்டால், வெற்றி நிச்சயம் என்பது சித்தர்கள் தம் சொல்.

‘‘சம்பந்த கணபதியை எண்ணித் தோற்றாரேது
இடையனோடு இருந்து சொக்கட்டானாடிய சிவன்
நம்மை சுவர்க்கம் புகுத்துவன் அட்ட லிங்கமுறை
இப்புவியை மிதிக்க புண்ணிய மூர்த்தியென தேவரும்
போற்ற பாரே. குடமுனி தஞ்சாப மோடிய தலமிது
பொன்னி தன் பாவமகற்றிய யீசனிவனே

-என்றார் கொங்கணவர். மகாவிஷ்ணுவோடு சிவபெருமான் சொக்கட்டான் ஆடிய தலமிது. பசு வடிவான பார்வதியின் சாபம், அகத்தியரின் சாபம், காவிரி நதியின் சாபம் போக்கிய புண்ணியத் தலமிதனை ஆராதித்து உயர்வோமே. இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகே உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum