Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை

Go down

ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை Empty ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்!- அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை

Post by oviya on Thu Dec 11, 2014 1:16 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்ää இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்ய முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்திருந்தது.

தேர்தலுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புவோர் கால நேரத்திற்கு அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் அடையாள அட்டை வழங்க முதலாவது நடமாடும் சேவை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் விசேட நடமாடும் சேவை ஆட்கள பதிவு செய்யும் திணைக்களத்தில் நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முதலாவதாக நடமாடும் சேவை ஒன்று டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 534,150 பேர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும் 35,000 பேருக்கு அடையாள அட்டை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடமாடும் சேவை இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் நாளை கினிகத்தேனை ஆரம்ப பாடசாலையிலும், கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்திலும், 13.12.2014 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்திலும், டயகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்திலும், 14.12.2014 அன்று வலப்பனை மாவட்ட செயலகத்திலும், இராகலை ஆரம்ப பாடசாலையிலும், 15.12.2014 அன்று ஹங்குரன்கெத்த மாவட்ட செயலகத்திலும், ஹோவாஹெட்ட வாசிகசாலையிலும், 16.12.2014 அன்று கொத்மலை மாவட்ட செயலகத்திலும், மல்தெனிய விவசாய மத்திய நிலையம் ஆகிய இடங்களில் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

ஜந்து வர்ண புகைப்படங்கள், பிறப்பு சான்றிதழின் மூலப் பிரதியுடன் நகல் பிரதி, 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகள் தேவைப்படுவதாகவும் இவை அனைத்தும் இலவசமாக பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
















oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum