Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பிறப்பும்.. இறப்பும்..

Go down

பிறப்பும்.. இறப்பும்.. Empty பிறப்பும்.. இறப்பும்..

Post by oviya on Sun Nov 30, 2014 2:32 pm

ஒரு சமயம் ராமகிருஷ்ணரிடம், அவரது சீடர்கள் பிறப்பு, இறப்பு ரகசியம் பற்றி கேட்டனர். அதற்கு புராண சம்பவம் ஒன்றை பதிலாக கூறினார் ராமகிருஷ்ணர். ஒரு முறை கயிலாயத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவர் அருகில் நந்தி தேவர் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பெரிய சத்தம் கேட்டது. அதைக் கேட்டு திடுக்கிட்ட நந்தி தேவர், ‘பெருமானே! இது என்ன சத்தம்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘ராவணன் பிறந்திருக்கிறான். அதுதான் இந்த சத்தம்’ என்றார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பயங்கர சத்தம் கேட்டது. மறுபடியும் என்ன சத்தம் என்று நந்திதேவர், ஈசனிடம் வினவினார். இப்போது சிவபெருமான், ‘ராவணன் வதம் செய்யப்பட்டு இறந்து விட்டான். அதனால்தான் இந்த சத்தம்’ என்று பதிலளித்தார்.

‘பிறப்பு, இறப்பு எல்லாம் இப்படி ஜால வித்தை போன்றவை. இதோ இப்பொழுது இருப்பது, மறுகணம் இல்லாமல் போய்விடும். இறைவன் மட்டுமே உண்மை. மற்றவை அனைத்தும் நிலையற்றவை’ என்று சீடர்களுக்கு விளக்கம் அளித்தார் ராமகிருஷ்ணர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum