Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி

Go down

இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி Empty இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி

Post by oviya Thu Dec 11, 2014 1:27 pm

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்டு தேர்தல் பிர­சா­ரங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எதி­ர­ணியின் முத­லா­வது பிர­சாரக் கூட்டம் கண்­டியில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.
ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­சாரக் கூட்டம் இன்று வியா­ழக்­கி­ழமை அனு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற ஏற்­பா­டாகி உள்­ளது.

தேர்­த­லுக்கு இன்­னமும் 28 நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் எதிர்­வரும் நாட்­களில் ஏட்­டிக்குப் போட்­டி­யான பிர­சா­ரங்­களில் ஆளும் கட்­சியும் பொது எதி­ர­ணியும் ஈடு­பட உள்­ளன. இந்த நிலையில் இன­வாத ரீதி­யான பிர­சா­ரங்­களும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்­னமும் முடிவு எடுக்­க­வில்லை. கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் நலன் கரு­திய முடிவினையே தாம் எடுக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பானது இது­வரை எந்­த­வித உத­வி­யி­னையும் செய்­ய­வில்லை. இதனால் இந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியை ஆத­ரிப்­பதன் மூலம் அர­சியல் தீர்­வி­னையும் பெற்­றுக்­கொள்ள முடியும். இது­கு­றித்து தமிழ் தேசியக் கூட்ட­மைப்பு சிந்­திக்க வேண்டும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

அமைச்­சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கருத்து தெரி­விக்­கையில், அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்­கையை நாம் உட­ன­டி­யாக நிரா­க­ரிக்கப் போவ­தில்லை. மாறாக அவ­ரது கோரிக்கை தொடர்பில் ஆழ­மாக பரி­சீ­லிப்போம் என்று பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து இரண்டு தட­வைகள் கூடி ஆராய்ந்­த­ போ­திலும் இன்­னமும் தீர்­மா­ன­மொன்­றுக்கு வர­வில்லை.

கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பு இன்­னமும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. மாறி வரும் சூழ்­நி­லைக்­கேற்ப தெளிவான முடிவு எடுக்­கப்­படும் என்று கூறி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பு இன்­னமும் தனது தீர்­மா­னத்தை அறி­விக்­கா­த­நி­லையில் அர­சாங்கத் தரப்­பி­லி­ருந்து கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­ப­டு­வ­துடன் எதி­ர­ணி­யி­ன­ருடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இர­க­சிய ஒப்­பந்தம் செய்­து­விட்­ட­தா­கவும் நாடு மீண்டும் பிரி­வி­னைக்கு செல்­ல­வுள்­ள­தா­கவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

கடந்த வாரம் தேசியப் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை சந்­தித்து பேசிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைக் கோரு­வது தொடர்பில் இன்­னமும் கட்சி தீர்­மா­னிக்­க­வில்லை.

ஆனாலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எதி­ர­ணி­யி­ன­ருடன் ஒப்­பந்தம் செய்­து­விட்­ட­தா­கவே தெரி­கின்­றது என்று கூறி­யி­ருந்தார். பத்­தி­ரிகை ஆசி­ரியர் ஒரு­வரின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு முதல் நாள் கொழும்பில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் நடத்­தப்பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. சென­வி­ரத்ன, எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் இர­க­சிய உடன்­ப­டிக்கை ஒன்றை செய்­து­கொண்­டுள்­ளனர்.

இந்த உடன்­ப­டிக்கை குறித்து தெற்கு மக்கள் தெரிந்­து­கொண்டால் பொது வேட்­பா­ள­ருக்கு வாக்­குகள் கிடைக்­காது என்­பதால் அதனை இர­க­சி­ய­மாக வைத்­துள்­ளனர் என்று குற்றம் சாட்­டி­யி­ருந்தார்.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் சந்­தி­ரி­காவும் உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டுள்­ள­மையின் பின்­ன­ணியில் ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­ பெற்றால் நாட்­டுக்கு பாரிய ஆபத்து ஏற்­படும்.

குறிப்­பாக மீண்டும் பயங்­க­ர­வாதம் உரு­வாகும் சாத்­தி­யமும் உள்­ளது என்றும் அமைச்சர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். இதேபோல் பல அமைச்­சர்­களும் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்ளை சுமத்திவரு­கின்­றனர்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கருத்து தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச, பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளன. இந்த ஒப்­பந்­தத்தை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என்று கோரி­யி­ருந்தார்.

இதற்கு ஒரு­படி மேல் போய் ஆளும் தரப்­புக்கு மாறி­யுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க கருத்து தெரி­வித்­துள்­ளமை கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒன்­றாக மாறி இருக்­கின்­றது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் ஐ.தே.க. தலை­மை­யி­லான மைத்­தி­ரி­பால சிறி­சேன, கூட்­டணி இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்­டுள்­ளது. இது நாட்டை மீண்டும் பிரி­வி­னை­வா­தத்­துக்கு தள்­ளி­விடும் என்று அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

இது­வரை ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த போது திஸ்ஸ அத்­த­நா­யக்க இவ்­வா­றான ஒப்­பந்தம் குறித்து கருத்து தெரி­விக்­க­வே­யில்லை. தற்­போது ஆளும் தரப்­புக்கு மாறி­ய­வுடன் ஒப்­பந்தம் குறித்து அவர் கூறிவரு­கின்றார்.

ஆளும்­ த­ரப்பில் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்தம் இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்ள நிலையில் கூட்­ட­மைப்­புடன் இர­க­சிய ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­ளவோ மறை­முக ஆத­ர­வினை பெற­வேண்­டிய அவ­சி­யமோ எமக்கு இல்லை.

பொய்­யான கருத்­துக்­களைக் கூறி எதி­ர­ணி­யினர் மீது சேறு­பூ­சவே ஆளும் கட்­சி­யினர் முனைந்து வரு­கின்­றனர்.

எமது கூட்­ட­ணிக்கு அனை­வ­ரது ஆத­ரவும் உள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர ஆளும் ­த­ரப்­பி­னரின் கருத்­து­க்க­ளுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.

இவ்வாறு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

ஆனால் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.

கூட்டமைப்பு இன்னமும் எவருடனும் ஒப்பந்தம் செய்ததாக தெரியவில்லை.

அப்படித்தான் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது அரசியல் இலாபத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர யதார்த்தபூர்வமாக நோக்குகையில் அது தவறான நடைமுறையாகும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!
» தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» தபால் மூலம் வாக்களிக்க ஆறு லட்சத்திற்கும் அதிகமானனோர் விண்ணப்பம் - அடையாள அட்டைகளை வழங்கும் நடமாடும் சேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum