Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற திருவிளக்கு பூஜை!

Go down

வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற திருவிளக்கு பூஜை! Empty வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற திருவிளக்கு பூஜை!

Post by oviya on Thu Dec 11, 2014 2:05 pm

இந்துக்களின் வாழ்வில் காசி, ராமேஸ்வரம் போல் இடம் பிடித்துவிட்ட புண்ணிய பூமி சபரிமலை. உலகியல் வாழ்வின் இல்வாழ்க்கை துயரங்களை அகற்றி பேரின்ப வாழ்விற்கு மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் கலியுக வரதனாகிய சபரி சாஸ்தாவை சரணடைகின்ற மண்டல காலம் தொடங்கியது “சரணம் ஐயப்பா” எனும் சரண நாம ஒலி எங்கும் நிறைந்தெழும். நகரங்களிலும், கிராமங்களிலும் அதிரும் சரண நாம ஒலி கேட்பவர் சிந்தையெல்லாம் பக்தி பரவசம் பெருகி ஓடச் செய்திடும். கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனை தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. மார்பில் மணிமாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் கோயிலிலும் வீதியிலும் இந்த நாம ஒலிகளை வாய் மணக்க ஒலித்துக் கொண்டு செல்லும் காட்சி நாடெங்கும் காணும் கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.

ஐயப்பசாமியின் முத்திரையை ஏந்தி நடக்கும் பக்தர்களுக்கு துணை புரியும் வகையில் சீரும், புகழும் சிந்தாது வாழும் சிந்தாதிரிப் பேட்டையில் பல புண்ணிய காரியங்களை சிந்தை ஸ்ரீ சபரி சாஸ்தா சேவா சங்கம் நடத்தி வருகிறது. பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாசர் சாமிகளால் வேல் பூஜிக்கப்பட்டு பிரசித்தி பெற்ற திருத்தலமாம் சென்னை - 2, சிந்தாதிரிப்பேட்டை நெ. 80, ஐயா முதலிய தெருவில் (தெற்கு) எழுந்தருளியுள்ள முருகவேள் திருக்கோயிலில் கார்த்திகை 1ம் தேதி முதல் ஐயப்ப சந்நிதானத்தில் சபரிசாஸ்தா சேவா சங்கத்தினரால் விசேஷ பூஜை பஜனை நடத்தி பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. பிரதி மாதம் கிருத்திகை திரு நாள் தோறும் முருகவேள் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்கள். இதுபோன்ற தெய்வீக திருப்பணியில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு முருகவேள் சாமிக்கு முத்து அங்கி, சிந்தை சபரி சாஸ்தா சேவா சங்கத்தினரால் அணிவிக்கப்பட்டது.

தீபத் திருநாளில் முருகவேள் சாமியின் இந்த முத்தங்கி தரிசனம், காண்போரைக் கவரும் விதமாக இருந்தது. இதுபோன்று விஜய வருடம், டிசம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தினங்களில் மூன்றாம் ஆண்டாய் மண்டல கால திருவிளக்கு மகா உற்சவ பூஜை சிந்தை சபரி சாஸ்தா சேவா சங்கத்தினரால் நடத்தப்பெற உள்ளது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற ஆண்டை போலவே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாட்களில் கணபதி ஹோமத்திலிருந்து ஆரம்பித்து, மாபெரும் அறுசுவை அன்னதானம், கூட்டுபஜனை, தீபாராதனை, அம்பல பிரதிஷ்டை, வாண வேடிக்கை, ஐயப்ப சுவாமி வீதி உலா, இறை இசை நிகழ்ச்சிகள், இரட்டை தாயம்பகா, உடுக்கை பாட்டு, மாளிகைபுரத்து அம்மன் அழைப்பு என்று அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

விளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள், அன்றைய தினம் தூய்மையாக விரதம் மேற்கொண்டு, ஐயப்ப சுவாமியை உளமாற பிரார்த்தனை செய்து, உள்ளங்கையில் தீபம் ஏந்தி, வீதி வலம் வந்து, அம்பலத்தில் எழுந்தருளும் ஐயப்ப சுவாமியை வணங்கினால், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம். மலர்முகம் கொண்டு கலந்திடும் அனைவரும் மலைதனில் வாழ்ந்திடும் மன்னவன் அருளால் பலவகை செல்வம் பாரினில் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட பகவானை வேண்டுவோம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum