Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

Go down

ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை Empty ஆலந்தூரில் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தின் 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

Post by oviya on Thu Dec 11, 2014 2:10 pm

ஆலந்தூர் நகர ஸ்ரீஐயப்ப சேவா சங்க 54ம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் நடந்தது. காலை 5 மணிக்கு நீலகண்ட நம்பூதிரியின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. கத்திப்பாரா மாங்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ஐயப்ப சுவாமியை சுமந்து வந்து ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள மைதானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கார தேரில் ஐயப்பனை அமரவைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் பஞ்சவாத்தியம், காவடி, நாதஸ்வரம், சிங்காரிமேளம், வாண வேடிக்கை நடந்தது. மீண்டும் ஆசர்கானாவில் உள்ள விழா பந்தலை வந்தடைந்தது. இரவில் ஐயப்ப பக்தி பாடல் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் ஊர்வலம் வந்தபோது, திருவிளக்கு ஏந்தி வந்தவர்களுக்கு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொன்டு ஐயப்பனை தரிசித்தனர். விழா ஏற்பாட்டை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum