Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!

Go down

ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்! Empty ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!

Post by oviya on Thu Dec 11, 2014 2:11 pm

''தொல்புகழ் நெல்வெண்ணெய் மேவிய
சொர்ணகடேச்சுவரா - பார்மல்கு புகழவர்
பண்பே யுன்னைச் சரணங்கொண்டே
வினையறுத்தோமே''

-சிவவாக்கியர் இந்தப் பாடலினால் நெய்வணை நின்ற சுவர்ணகடேசுவரப் பெருமானின் பேரருளை உணரலாம். மகா சிவராத்திரி நாளன்று சுவாமியின் திருமேனியில் சூரிய ஒளி இன்றும் பிரகாசிக்கிறது. சுவர்ணகடேசுவரப் பெருமானை வெண்ணெயப்பர் என்றும் சித்தர்கள் போற்றுகின்றனர். எப்படிப்பட்ட பாவங்கள், எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும், அவற்றை நீக்கி, நமக்கு வீடு பேற்றை அருளும் தயாளமூர்த்தி இவரே என்பதை போகர் தமது சுவடியில் பின்வருமாறு பேசுகின்றார்.

''சுடருஞ் சூழ்சொர்ண கடேசன் பெரும்
பாவமொடு தோசமுமகற்றி நம்மை
யாட்கொண்டே வீடு பேரின்பம்
யீவானொன்றும் பொய்யிலையே''

-என்றார். இங்குறையும் தல விநாயகர் வரசித்தி விநாயகர் என்றே பெயர் பெறுகின்றார். காரிய விக்நங்களை வேருடன் களைந்து எந்த காரியத்திலும் முழு வெற்றியைத்தர வல்லவர் இவர் என்ற பொருள் கொண்ட பாம்பாட்டி சித்தனார் பாடல் இதோ:

''விக்நமறுத்து செயமே தருமிவன்
பாவநாசஞ் செய்தே கார்ய ஸித்தியாக்குவன்:
அகந்நாடி நிற்குங் கருமஞ்
சித்தி செய்யுந் தன்மை கொண்டே
சிவனுமிவனைச் சித்திவிநாயக மென்றே
போற்றினரே''

நந்தீசுவரர் சிவபெருமானின் கோயில்களில் அதிக முக்கியம் வாய்ந்தவர். இங்கு அதிகார நந்திப் பெருமானார், இரண்டு கால்களையும் இணைத்து கரங்களைக் கூப்பி சிவபெருமானாம் சுவர்ண கடேச்சுவரனிடம் பக்தர்கள் தம் மனச்சுமையை குறைத்து, அவர்கள் இன்புற்று வாழ, வேண்டிக் கொள்கின்றார். மிகுந்த வரப்பிரசாதி இந்த நந்தி தேவனார். இவரைத் தொழுது நிற்போருக்கு, அழகிய மணவாளன் அமைவதுடன், சகலவிதமான சம்பத்துக்களும் இல்லற சுகமும் கிட்டும் என்கின்றார் அகத்தியர்.

''ஒப்பிலாவதி காரநந்தி பாதங்கூட்டி
வணங்குவோனை - பத்தர்தங்குறை
யறுக்கச் சிவனாரடி முறையிடுவோனை
அநுதினமுமாராதித்தே யடி நிற்போருக்கு
மணவாளன் மகிமையாய்ச் சேர, இகபர
சுகமொடு இல்லபோகமுங்கிட்டு
மய்யமிலையே''

-என்பது அவர்தம் பாடல்.

''நவநாயகர் தொழுதேத்துந் நெல்லணை
நின்றானம்மய்யப்பன் - சுவர்ணகடேசனை
கொண்டாடுவார் தமக்கே பேரய்ஸ்வர்ய
மொடு துன்பமிலாப் பெருவாழ்வு
சேர பகலவன் பட்டொளி பட்டகாலை
நீலமொடு பசுமையுஞ் செம்மையுமென பாலொப்ப
வொளி மாற கண்டோமே''

-என்ற அழுகணி சித்தர் வாக்கை ஆய்கையில், மகாசிவராத்தி அன்று, சூரியனின் கதிர்கள் மூலவர் மேல் விழுந்து, சிவப்பு, பச்சை, நீலம், வெண்மை போன்ற நிறங்களில் சிவபெருமானாம் சுவர்ண கடேச்சனார் மாறி மாறி தெரிகின்றார். அது நவகிரகங்கள் சிவ பெருமானை தொழுதேத்தி கொண்டாடும் காலம் என்றும், அந்த நேரத்தில் சிவபெரு மானை ஆராதிப் போருக்கு நவ கிரகங்களின் ஆசி முழுமையாகக் கிடைப்பதுடன், நவ நாயகர்களால் உருவாகும் தொல்லைகளும் அகலும் எனப் பேசுகின்றார் சித்தர்.

கருவறையில் சுவர்ணகடேசுவரர் சுயம்பு லிங்கவடிவாகி உருத்ராட்சப் பந்தலடியில் வீற்றிருக்கின்றார். இந்த பந்தலில் பிரமாண்டமாக ஏழாயிரத்து ஐந்நூறு மணிகள் இருக்கின்றன. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சதுர்த் தேவரும் வணங்கி ஏத்திய திவ்விய ரூபன் இந்த சுவர்ணகடேச்சுவரர். இங்கு சூலத்தின் மத்தியில் சிவன் நின்ற கோலத்தில் உற்சவராக அருள்பாலிக்கின்றார். உற்சவ திவ்விய மூர்த்திக்கு சந்திரசேகரப் பெருவுடையான் என்றே பெயர்.

''பிணி பலவிரட்டி வினையகற்றி
பிறவி நோயறுக்குஞ் சந்திர சேகரப்
பெருவுடையான் சூலத்தோடு நின்ற
ருருள் புரிய நெல்லணை நின்று
யுய்ந்தொழிந்தோமே''

-என்றார் கொங்கணச் சித்தர். நோயின் தன்மை யாதாயினும், நோயின் காலம் எத்துணை பெரிதாயினும் அந்நோயைக் குணமாக்கி காப்பான். நமது வினைகளை அகற்றுவான். பிறவி நோய் நீக்கி பிறவாமை தரும் ஆற்றலு டையோன். சூலத் திடை நின்று நம்மை ஆட் கொள்ளும் இச்சந்திரசேகரனை நெல்அணை என்னும் திவ்விய சேத்திரத்தில் தொழுது பிறவிப்பயனை அடைந்தோமே என்றார் சித்தர். வயல்கள் நிறைந்த இப்பகுதியில் அளவிற்கு அதிகமான மழை பொழிந்தமையால் ஊரினுள் உள்ள ஏரி உடைந்து வெள்ளம் ஊருக்குள் புக, சிவபெரு மானே ஒரு வாலிப உருவெடுத்து, வீட்டில் உள்ள நெல்மூட்டைகளைக் கொண்டு அணைகட்டி, நீரின் அபாயத்தை நீக்கி, மக்களைக் காத்து நின்றமையால் இத்தலத்திற்கு 'நெல்அணை' என்ற பெயரும் உண்டு. இதனையே கொங்கணர் ''நெல்லணை நின்று'' என பாடுகின்றார். அகத்தியரும்,

''செம்பொற் குடமீந்த சிவனே
யுனை நாடி நிற்குமடியவருக்கு
பொன்னொடு போகமு மாரோக்ய
முமீந்தே குறையிலா பெருவாழ்வீய்வீர்''

-என்றார். பொற்காசுகள் நிரம்பிய பொற் குடத்தை சிவன், பொருளின்றி வாடிய ஏழையர் ஒவ்வொருவர் வீட்டிற்கும் தந்து நின்றமையால், ''சுவர்ணகடேசன்'' என்ற பெயர் பெற்றார். இந்த சுவர்ணகடேசரை தொழுதாற்கு அல்லல் இல்லை, பொருட்பீடை வாராது, எந்த வியாதியும் அண்டாது என்ற பொருள் கொண்ட அகத்தியர் பாடல் மிகவும் போற்றத் தக்கது. போகனார்,

''எதலவாயன்னை யழைத்தே யப்பனைக்
காட்டவே பாதங்கூட்டி வளைத்தாடி
விரட்காட்டிய சம்பந்தனாரை தொழுவார்
ஆடவல்லாரே''

-என்று பாடியுள்ளார். திருத்தல யாத்திரையின் போது இருட்டில் வழி தெரியாது திணறி நின்ற சம்பந்தரை அன்னை நீலமலர்க்கண்ணி அம்மாள் கண்டு, சிவனிடம் அழைத்து வந்தார். ஆனந்தம் மேலிட்ட திருஞான சம்பந்தர் ஒரு திருவாசியின் மத்தியில் தன் இரு கால்களையும் வளைத்து ஒன்றாக இணைத்துக் கொண்டு, வலக்கையில் ஒரு விரலை காட்டி நடனமாடி இறைவனைத் தொழுதார். நடனமாடி இறை அடிகளை தொழுபவர், நடனக் கலையில் சிறந்து விளங்கி, கீர்த்தி பெறுவர். அம்பாளை திருஞானசம்பந்தர் கண்ட தலமான ''எதலவாடி'' இன்றும் துலங்குகின்றது. இங்குறைகின்ற பைரவமூர்த்திக்கு பலவிதமான சக்திகள் உண்டு. ஊனம் அகற்றி, அறிவாற்றலை மேம்படுத்தி, ஞாபக விருத்தி உண்டாக்குவதோடு அதிக கோபம், பிடிவாதத்தைக் கணிச மாகக் குறைத்து நம் உடலைப் பேணுவார். இரத்தக் கொதிப்பு நோயை குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் இவரே என்கின்றார் புலிப்பாணி சித்தர்.

''பாணியோதுஞ் சத்திய மொழியறிவீருலகத்தீர்
பயிரவனிவன் பிறப்பறுப்பான்
குருதி யுறை பீடை பல நீக்கி,
இதயத் துடிப்பைச் சீராக்குவான்.
அழுத்தந்தனை கட்டுக்குக்குள் கிடத்துவான்.
சிந்தனையோடு ஞானமுங்
கேள்வியுங் கூட்டி மறதியழிப்பானிவனா
லாகாதேது யியம்பு''

-என்றார். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வர இந்த பயிரவ பூசை மிகவும் அத்தியாவசியம் என்றே பல சித்தர்கள் பாடியுள்ளனர். அம்பாள் சன்னதிக்கு எதிரே இருக்கும் தீர்த்தக் கிணறு மிகவும் புனிதம் வாய்ந்தது. மகா சிவராத்திரி நாள் நீராடி நிற்போர் தம் கபால பீடை, தீரா தலைவலி, மூளை நோய் போன்றன குணம் காணும் என்கிறார் இடைக்காடர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum