Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் குங்குமவல்லி தாயாருக்கு 64வது ஆண்டு வளைகாப்பு திருவிழா

Go down

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் குங்குமவல்லி தாயாருக்கு 64வது ஆண்டு வளைகாப்பு திருவிழா Empty உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் குங்குமவல்லி தாயாருக்கு 64வது ஆண்டு வளைகாப்பு திருவிழா

Post by oviya on Thu Dec 11, 2014 2:37 pm

திருச்சி : கர்ப்பிணிகளின் துயர்நீக்க தாயுமானவர் தானாக வந்த காரணத்தால் தான் தோன்றீஸ்வரன் என பெயர் கொண்டு உறையூர் சாலை ரோட்டில் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இந்த ஆலயத்தில் அம்பிகையின் பெயர் குங்குமவல்லி.(வளைகாப்பு நாயகி). அம்பிகைக்கு ஆண்டுதோறும் தை மாதம் வளையல்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் நீங்கவும் 48 நாட்கள் திரிசதி ஹோமபூஜை கடந்த 13ம் தேதி துவங்கியது.

வளையல் காப்பு விழாவை கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் மற்றும் பொதுமக்களும் விமரிசையாக நடத்துகின்றனர். இந்த ஆண்டு 64ம் ஆண்டு வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சக்கர சங்கு பூஜை, அபிஷேக ஆராதனை குங்குமவல்லிக்கு நடைபெறுகிறது. 26ம்தேதி மாலை 6 மணிக்கு கலசபூஜை நடைபெறும். புதன் அன்று மாலை 300 ரவிக்கைதுணி, மங்கலப்பொருட்கள் வைத்து குங்குமவல்லி தாயாருக்கு பூஜை நடைபெறும்.

31ம் தேதி(வெள்ளி) காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து ஹோமபூஜை நடைபெறும். மதியம் 1 மணிக்கு வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் ஆரம்பமாகிறது. 2.30 மணிக்கு தீபாராதனை, சிறப்புபூஜை, 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள்படம் பிரசாதமாக வழங்கப்படும். வரும் 1ம்தேதி(சனி) காலை 7மணிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஹோமம், சந்தானபாக்கியம் வேண்டி ஹோமபூஜை நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்கும, அம்பாள்படம் பிரசாதம் வழங்கப்படும். 2ம் தேதி(ஞாயிறு) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை திருமணம் வேண்டி ஆண், பெண் இருபாலருக்கும் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், சுமங்கலிகளுக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடக்கவும், மாங்கல்ய பாக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜை நடைபெறும். மதியம் 2 மணிக்கு அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்படும். 3 நாட்களும் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, ஹரிகர குருக்கள் செய்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum