Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ நிறைவு விழா

Go down

காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ நிறைவு விழா Empty காமாட்சியம்மன் கோயிலில் பிரமோற்சவ நிறைவு விழா

Post by oviya on Thu Dec 11, 2014 2:48 pm

பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பிரமோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 6ம்தேதி தொடங்கி நேற்றுடன் விழா முடிந்தது. நிறைவு நாளான நேற்று விஸ்வரூப தரிசனம் நடந்தது. விழாவின்போது தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. தினந்தோறும் ஆன்மீக சொற்பொழி, ரேணுகாதேவி சம்காரம், குறவஞ்சி கிராமிய கலைநிகழ்ச்சி, மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது. நேற்று அதிகாலையில் தொடங்கி காலை 8 மணி வரை நடந்த விஸ்வரூப தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பாலகுட அபிஷேகம் நடந்தது. பெண்கள் ஊர்வலமாக பால்குடங்களை சுமந்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா விஸ்வநாத சாஸ்திரிகள், கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum