Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்

Go down

கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் Empty கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்

Post by oviya Thu Dec 11, 2014 2:49 pm

குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவமான ஹயக்ரீவரை, விஷ்ணுவின் வடிவமாக கருதி வைணவர்கள் வழிபடுகின்றனர். கல்வி கடவுளாகவும் வணங்குகின்றனர். மது, கைடபன் எனும் அசுரர்கள், படைக்கும் கடவுளான பிரம்மா தூங்கி கொண்டிருந்தபோது வேதங்களை திருடிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர். தூங்கி எழுந்தபோது வேதங்கள் இல்லாததை கண்டு பிரம்மா, திகைத்து போனார். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்று அதனை மீட்டுத் தரும்படி காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் வேண்டினார்.

இதற்கிடையில் மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் கடும் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு அதில் வெற்றியும் கண்டார். பின்னர் வேதங்களை மீட்டு, நான்முக கடவுளான பிரம்மனிடம் தந்தார். ஆனால் இந்த அவதாரம் தசாவதாரத்திற்குள் வருவதில்லை.

லட்சுமி ஹயக்ரீவர் : மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்ரீவருக்கு உக்கிரம் தணியாததால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்தார். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். லட்சுமிக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் : தூய மெய்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு ஆகியவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடைய ஸ்தோத்திரம்.

“ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே“

ஹயக்ரீவர் காயத்திரி :

‘ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸௌ ப்ரஸோதயாத்‘

தேர்வு நேரம் நெருங்கும் வேளையில் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டுடன் மாணவர்கள் படையெடுப்பு அதிகளவில் அமைந்துள்ளது. அவ்வாறு கல்விக்கு கண்ணாக இருந்து அருள் பாலிக்கும் கோயில்களுள் முதன்மையானது கடலூர் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோயில். கடலூர் அருகே அமைந்துள்ள திருவகீந்திரபுரம் (தற்போது திருவந்திபுரம் என்று அழைக்கப்படுகிறது) திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகும். தமிழகத்தில் நடுநாட்டில் அமைந்துள்ள திருப்பதிகள் இரண்டாகும். அதில் ஒன்று திருவந்திபுரம்.

இத்திருக்கோயிலின் பக்கத்து மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயில். திருவந்திபுரம் சன்னதி வளாகத்தில் இருந்து 74 படிகளை ஏறி சென்றால் ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது. இந்த படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது. இந்த பரிமுகன் (ஹயக்ரீவர்) கல்வியும், ஞானமும் அருளவல்லவர். தேர்வுக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் ஐஏஎஸ் போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்று சென்று வெற்றி வாகை சூடுகிறார்கள். பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் இவரது சன்னதியில் கால் பதித்தால் உடனடி நிவாரணம் கிட்டும்.

வழிபாடு: இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உலகளவில் இருந்தும் ஹயக்ரீவர் சன்னதிக்கு கல்வி அருள் வேண்டி மாணவ செல்வங்கள் வருகின்றனர். தேன், ஏலக்காய் மாலையுடன் நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுத்து உபகரணங்கள் வைத்து வழிபடுவது சிறப்பு. சரஸ்வதி தேவிக்கு குருவாக சிறப்பு பெற்றவர். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழாவின் போது சரஸ்வதி பூஜையன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஹயக்ரீவர் சன்னதியில் கல்வியின் துவக்கத்தை துவங்குவது வழக்கம்.

தற்போது பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து வழிபட்டு செல்வது அதிகளவில் உள்ளது. ஞானம், ஆனந்தம் இவற்றின் வடிவானவரும், இக்குணங்கள் தன்னிடம் எல்லையில்லாமல் இருக்கப்பெற்றவரும், சிறிதும் மாசற்ற ஸ்படிக மணிபோல் தூய வெண்மை நிற திருமேனி உடையவரும், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாகவும், அவற்றை அனைவருக்கும் அருளும், தெய்வமாக நிற்பவருமான அருள்மிகு ஹயக்ரீவரை நாம் அனைவரும் வழிபடுவோம்.

பெருமானின் அற்புதங்கள்: ராமாயணத்தில் சஞ்சீவி மலையை அனுமன் இமயத்திலிருந்து இலங்கைக்கு எடுத்துச்செல்லும் போது அவரது வாயு வேக பயணத்தினால் சஞ்சீவி மலையின் ஒரு பகுதி சரிந்து திருவந்திபுரத்தில் விழுந்தது. இம்மலையே திருவந்திபுரம் திருக்கோயில் எதிரில் ஔஷதமலை என்னும் பெயரோடு விளங்குகிறது. இப்புனிதமான ஔஷத மலையின் மீது ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீதேசிகருக்கு காட்சியளித்தார்.

வேதங்களை மீட்டு பிரமனுக்கு உபதேசித்ததால் ஞானமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்ம மகரிஷி தவம் செய்து இறைவனை தரிசித்த தலை சிறந்த தவ பூமியாகும். தியானத்திற்கு உகந்த இடமாகும். அருள்மிகு தேவநாதனை திருப்பதி சீனுவாச மூர்த்தியாகவே வழிபடுவது வழக்கம். திருப்பதி செல்ல இயலாத பக்தர்கள் தம் வேண்டுகோள்களை இவரிடமே செலுத்திக்கொள்ளலாம்.

செல்வது எப்படி: கடலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவந்திபுரம். கடலூர் வரை ரயில் மற்றும் பேருந்து வசதியுள்ளது. பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பண்ருட்டி சாலை வழியாக பேருந்து வாகனங்களில் செல்லலாம்.

புதுவை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்: புதுவை ஸ்ரீராமகிருஷ்ணா நகரில் எழுந்தருளிய ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பெருமானை வணங்கினால் மாணவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்கிறார். இவரை நினைத்தாலும், பூஜித்தாலும் கைங்கர்யம் செய்தாலும் அதன் பலன் நம் குழந்தைகளை சேரும். பரிமுகன் என பக்தியுடன் பக்தர்களால் ஆராதிக்கப்படும் ஹயக்ரீவர், சதுர்முக பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்து அனைத்து உலகங்களையும் படைக்கும் சக்தியையும் தந்தருளிய பிரபு. அரங்கனிடம் ஈடிணையற்ற பக்தி கொண்டவர் திருமங்கையாழ்வார், சக்தியும் கருணையும் பெருமையும் பொருந்திய லட்சுமி ஹயக்ரீவரை குழந்தைகளுடன் வந்து வணங்கினால் கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தர காத்திருக்கிறார்.

“முன் இவ்வுலகம் ஏழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம்
அருளிய என் பரமன் காண்மின்”

பெருமானை என போற்றி பாடியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum