Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மு.கா 18ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து,சிறுபான்மையினருக்கு வரலாற்றில் மன்னிக்கமுடியாத துரோகம் இழைத்துவிட்டனர்: ந.தே.முன்னணி

Go down

மு.கா 18ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து,சிறுபான்மையினருக்கு வரலாற்றில் மன்னிக்கமுடியாத துரோகம் இழைத்துவிட்டனர்: ந.தே.முன்னணி  Empty மு.கா 18ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து,சிறுபான்மையினருக்கு வரலாற்றில் மன்னிக்கமுடியாத துரோகம் இழைத்துவிட்டனர்: ந.தே.முன்னணி

Post by oviya on Fri Dec 12, 2014 12:43 pm

மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமுகமாக நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கல்குடா, ஓட்டமாவடி எஸ்.எம்.ரி.ஹாஜியார் வீதியிலுள்ள எம்.எம்.மொஹமட் புஹாரி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் இடம்பெற்றது.
அபூ தாஹிர் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும்,பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான், அக்கட்சியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மது, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எல்.ரீ.புர்க்கான் மற்றும் கல்குடாவின் புத்திஜீவிகள், கல்விமான்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பிரசன்னமாய் இருந்தனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மது உரையாற்றுகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கையினை யதார்த்த, அறிவு சார் ரீதியாக விளக்கியதோடு, இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறான முடிவினை எடுக்க வேண்டுமென்பதனையும், எதற்காக எமது நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்பதனை அடிப்படையாகக் கொண்டு எதற்காக நாங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் அல்லது அவருடைய வெற்றிக்காக முஸ்லிம்கள் களத்தில் இறங்க வேண்டுமென்ற அரசியல் யதார்த்தத்தை அர்த்த ரீதியாகவும், இன, மத, மொழி வேறுபாடுகளை தாண்டி மக்களின் சிந்தானா சக்திக்குட்பட்டு மக்கள் சிந்திக்கும் வகையில், சம கால அரசியல் யதார்த்தத்தையும், முக்கிய தேவையாகவுள்ள அரசியல் மாற்றத்தையும் பற்றி காத்திரமான முறையில் உரையாற்றினார்.

கட்சியின் தேசியத்தலைவர் அப்துர் ரஹ்மான் உரையாற்றுகையில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முக்கிய கால கட்டத்தில் மக்களுக்காக எடுக்க வேண்டிய காத்திரமான முடிவினை எடுக்கத்தவறி விட்டதாகவும், தலைவர் றவூப் ஹக்கீமும், அவருடனுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் மோகத்தினால் கவரப்பட்டு பதவிகளுக்காகவும், சுக போக வாழ்க்கையினை அனுபவிப்பதற்காகவும் குர்ஆன் ஹதீஸ்களைப் பாவித்து, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைப் பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமல்லாமல், அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் தனது அமைச்சுப்பதவியினையும், தனது பாராளுமன்ற கதிரையினையும் தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றாரே ஒழிய சமூகத்தைப் பற்றி கடுகளவேனும் சிந்திப்பதில்லையென முஸ்லிம் காங்கிரசையே கூடுதலாக குற்றம் சுமத்தியவராக உரையாற்றினார்.

மேலும், நடைமுறையிலிருந்த 17 வது திருத்தச்சட்டமானது சிறுபான்மை சமூகங்களுக்கு சார்பான பல ஆணைக்குழுக்களை உள்ளடகியதாக இருந்த சமயத்தில், அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு சிறுபான்மை சமூகத்துக்கு சார்பாக இருந்த ஆணைக்குழுக்களை இல்லாதொழிக்க வேண்டுமென்பதற்காக 18வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18 வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், சிறுபான்மை சமூகத்துக்கு வரலாற்றில் அழிக்க முடியாத துரோகத்ததினை இழைத்து விட்டது.

அது மட்டும் அல்லாது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது அம்பாறையில் குறிப்பிட்ட பிரதேசங்களை மட்டும் வைத்து கரையோர மாவட்ட அலகினை கோருவதானது, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நன்மையாக அமையுமா என்பது கேள்விக் குறியாகவுள்ள, இந்த கரையோர மாவட்டம் சம்பந்தமாக தலைவர் றவூப் ஹக்கீமிடம் தான் ஒருமுறை வினவிய போது, இதனால் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கு எந்தப்பிரயோசனமுமில்லையென அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தமையானது அவர் வாக்களித்த மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையற்ற தன்மையையும், அவருடைய குறுகிய அரசியல் யதார்த்தத்தையுமே எடுத்துக்காட்டுகின்றது.

அப்துர் ரஹ்மான், ஜனாதிபதியின் சொத்துக்குவிப்பு, ஜனாதிபதியின் புதல்வர்கள் பொது மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர வாழ்க்கையினை வாழ்வது மற்றும் ஐந்து ஹெலிகொப்டர்களை தங்களது சொந்த தேவைகளுக்காகக் கொள்வனவு செய்து, நாட்டு மக்களை நாளுக்கு நாள் கடனாளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றார் எனக்கூறினார்.

அத்தோடு, கல்குடா மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் கல்குடாவின் அரசியல் தலைமையானது, அஸ்வர் ஹாஜியின் தேசிய பட்டியல் வெற்றிடத்தை பெற்றுக்கொண்டமையானது, சம கால அரசியலில் காத்திரமான முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், மக்களை அரசியல் அனாதைகளாக்கும் செயலாகவே இருக்கின்றதென்ற தொணியில் தனது பேச்சினை தொடர்ந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சில பொது மக்கள் மைத்திரியை ஆதரிக்க பொதுக்கூட்டம் நடத்தினால், கூட்டமானது மைத்திரியை ஆதரிக்கும் கூட்டமாகவே அமைய வேண்டுமென்றும், கல்குடாவின் அரசியல் தலைமையையோ அல்லது றவூப் ஹக்கீமையோ இங்கு அதிகப்படியாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென இடையூறு செய்தனர்.

மேலும், கூட்டத்தில் இடையூறு செய்த பொது மக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் உரையாற்ற ஆரம்பித்ததிலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், பசீர் சேகுதாவூத்தையும், அமீர் அலியையும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களையும் விமர்சித்தவராகவே உரையாற்றுகின்றார்.

ஆனால், அவர் தனது ஊரான காத்தான்குடியைச் சேர்ந்த அரசாங்கத்துக்காதரவு தெரிவித்து காத்தான்குடி கொழும்பு பிரதான வீதிகளில் நடப்பட்டுள்ள ஈச்சை மரங்களில் எல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் படங்களைத் தொங்கவிட்டிருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவைப் பற்றி ஏன் ரஹ்மான் விமர்சித்து உரையாற்றவில்லை என்பதே குறுக்கீடு செய்த மக்களின் முக்கிய ஆதங்கமாக இருந்தது.

இது சம்பந்தமாக குறுக்கீடு செய்த முக்கிய நபர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தலைவர் ரஹ்மான் பேசும் போது, மைத்திரிபாலவை ஒரு கருவியாகவே இத்தேர்தலில் பாவிக்க வேண்டுமென்று உரையாற்றியமையானது, இவர்கள் இதய சுத்தியுடன் மைத்திரிபாலவை ஆதரிக்கவில்லையென்றும், இப்பகுதியில் நடைபெற்ற மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு ஒன்று சேர்ந்த மக்கள் அலையினை பார்த்து விட்டு, இது தான் சந்தர்ப்பமென தங்களது அரசியல் கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினைக் கல்குடாவில் பிரபலியப்படுத்தி விடலாமென்ற நோக்குடனே இன்று கல்குடாவில் கூட்டத்தினை நடத்துகின்றார்கள் என கூச்சலிட்டனர்

மேலும் 18 வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்கா விட்டாலும், அரசாங்கம் அதனை நிறைவேற்றியே இருந்திருக்குமென்பது ஒரு புறமிருக்க, 18வது திருத்தச் சட்டத்திலும் சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகள் உள்ளதாகவும் குறுக்கிட்டோர் தெரிவித்தனர்.

அப்துர் ரஹ்மான் அவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது ஊர்க்காரன் என்ற படியினாலேயே ஹிஸ்புல்லாவை மட்டும் விமர்சித்து பேசுவதினை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரசையும் , கல்குடாவின் அரசியல் தலைமையையும், ஏனைய அமைச்சர்களையும் தாக்கி பேசியதாகவும். அவர் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதற்காகவே தனது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலுமிருந்து விலக்கி கொண்டனர் என்றும், இங்கு குறுக்கீடு செய்பவர்கள் எல்லாம் கல்குடாவின் அரசியல் தலைமைக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் எதிரானவர்களாகவும், பொது வேட்பாளர் மைத்திரிபாலவை வெற்றியடைய செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இருப்பவர்களாக இருக்கின்றனர் எனத்தெரிவித்தனர். “

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்துக்கு ஜால்ரா அடிப்பவர் என்று விமர்சிக்க வந்தால், தலைவர் அப்துர்ரஹ்மான் முதல் தனது ஊர்க்காரனான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா விமர்சித்து விட்டு, கல்குடாவில் தனது உரையினை ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஆனால், முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைப்பது போல ஹிஸ்புல்லாவை மறைத்து விட்டு, கல்குடாவின் அரசியல் தலைமையையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் விமர்சித்துக் கொண்டே சென்றமையானதை பார்க்கும் போது, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரித்து உரையாற்றுவதை ஒரு கேடயமாக வைத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை கல்குடாவில் காலூன்றச் செய்யும் ஒரு கூட்டமாக தென்பட்டதனாலேயே நாங்கள் ரஹ்மான் உரையாற்றும் போது, குறுக்கீடு செய்ததாக குறுக்கீடு செய்தவர்கள் தெரிவித்தனர்.


















oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum