Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -

Go down

இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -  Empty இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -

Post by oviya on Fri Dec 12, 2014 12:44 pm

இணையத்தின் ஊடாக செய்யப்படும் போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை ஒன்று அவசியமாகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமை;சசர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டுவார் என அறிந்து கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு பித்து பிடித்துள்ளது.

இதன் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் சேறு பூசப்படுகின்றது.

இணையத்தில் செய்யப்படும் போலி குற்றச்சாட்டுக்களுக்கு இணையத்தின் ஊடாகவே பதிலளிக்க ஓர் பொறிமுறைமை அவசியமாகின்றது.

பொறுப்புணர்ச்சியின்றி சில சமூக இணைய வலையமைப்புக்களில் தகவல் வெளியிடப்படுகின்றது.

நாட்டின் 90 வீதமான உயர் மட்ட வர்த்தக சமூகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புகின்றது.

ஏனெனில், அரச சேவையை இந்த அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. இது உயர்மட்ட வர்த்தக சமூகத்திற்கு விருப்பமில்லை.

மைத்திரியை தோற்கடிக்க வேண்டும், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும். அதனை விடவும் சந்திரிக்காவை தோற்கடிக்க வேண்டும். மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் சந்திரிக்கா செயற்படுகின்றார்.

இந்த நோக்கம் வெற்றியடைய இடமளிக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum