Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வடக்கில் மீன் வளத்தை அள்ளிச் செல்லும் சீன மீனவர்கள்

Go down

வடக்கில் மீன் வளத்தை அள்ளிச் செல்லும் சீன மீனவர்கள் Empty வடக்கில் மீன் வளத்தை அள்ளிச் செல்லும் சீன மீனவர்கள்

Post by oviya on Mon Dec 01, 2014 1:10 pm

சீன மீனவர்கள், இலங்கை மீனவர்கள் போல் வேடமிட்டு வடபகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்கில் மீனவர்கள் பெருமளவில் மீன்வளத்தை இழந்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன்,

இந்திய ட்ரோலர் மற்றும் இந்திய மீனவர்கள் வடக்கில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த காரணத்தினால், கடந்த காலங்களிலும் வடபகுதி மீனவர்கள் தமது கடல் வளத்தை இழந்தனர்.

தற்போது சீன மீன்பிடியாளர்களினால், வடபகுதி மீனவர்கள் தமது மீன்வளத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சீன மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிநவீன மீன்பிடி உபகரணங்களாகும்.

இந்த மீன்பிடி படகுகளுக்கு அருகில் இலங்கை மீனவர்கள் எவருக்கும் செல்ல முடியாது. அவர்கள் தினமும் பெருந்தொகை மீனை பிடிக்கின்றனர்.

இதனால், வடபகுதி மீனவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் இலங்கை மீனவர்கள் போல் வேடமிட்டு சீன மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்க வருகின்றனர்.

இதனால், சீன மீனவர்களை அடையாளம் காணமுடியாது என்பதால், அவர்களை கைது செய்வது தொடர்பான விடயத்தில் கடற்படையினர் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum