Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

Go down

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் Empty காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

Post by oviya on Fri Dec 12, 2014 1:13 pm

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 7ம்தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. வரும் 20ம்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பவளக்கால் சப்பரம் உற்சவம், சூரியபிரபை, பூத வாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு அறுபத்துமூவர் நாயன்மார்கள் கண்ணாடி அறையில் நான்கு ராஜவீதிகளில் ஊர்வலம் வந்தனர். இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஏழவார் குழலியுடன் ஏகாம்பரநாதர் பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், புளிசாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பரநாதரை வழிபட்டனர். இதையடுத்து வீதியுலா, ரத உற்சவம், ஆள்மேல் பல்லக்கு, சபாநாத தரிசனம், கந்தப்படி உற்சவம், புருஷ மிருக வாகனம், தீர்த்தவாரி மற்றும் 108 கலச அபிஷேகம், சங்காபிஷேகம் நடக்கிறது.சிம்ம வாகனம், சந்திர பிரபை, தங்கமயில் வாகன உற்சவம், வெள்ளி இடப வாகனம், கைலாஷ பீட ராவண வாகனம், வெள்ளித்தேர், குதிரை வாகனம், வெள்ளி மாவடி சேவை, திருக்கல்யாண உற்சவம், உத்திரகோடி விமானம், பஞ்சமூர்த்திகள், யானை வாகனம், திருமுறை உற்சவம் போன்றவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum