Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா

Go down

மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா Empty மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா

Post by oviya on Fri Dec 12, 2014 1:14 pm

கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா

சென்னை : மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோல விழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.
ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது.

கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. நாயன்மார்கள் 63 பேர் புடை சூழ விநாயக பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான் ஆகியோர் வீதியுலா நடக்கிறது.

அறுபத்து மூவர் விழாவையொட்டி இன்று காலை 9 மணிக்கு திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. இதையடுத்து என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

மயிலாப்பூர் பெயர் வந்தது எப்படி?

மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பார்வதி தேவி மயில் உருவத்தில் சிவனை நோக்கி தவம் இருந்ததாகவும் அதனாலேயே இக்கோயில் அமைந்துள்ள பகுதிக்கு மயிலாப்பூர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கோயிலில் கபாலீஸ்வரருக்கும் கற்பகவல்லி தாயாருக்கும் தனித்தனியாக கோயிலும், பல்வேறு பரிவார மூர்த்திகளும் உள்ளன. பிற்கால திராவிடக் கட்டிட கலைபாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நாற்புரமும் மாடவீதிகளையும் அழகிய கோபுரங்கள் திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

தொண்டர்களுக்கான திருவிழா

மனிதன் தோன்றிய காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்து சமயத்தை பாதுகாப்பதற்கும், தூக்கி நிறுத்துவதற்கும், புகழ் பரப்புவதற்கும் தன்னலம் கருதாத சிவநெறி செம்மல்கள் பிறந்து சிறக்கிறார்கள். அந்த வகையில்தான் சுமார் 2000 ஆண்டு காலமாக இந்து சமய வளர்ச்சிக்காக முக்கண்ணன் சிவபெருமான் புகழ் பாடியதற்காக பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில், முக்கியத்துவம் கொடுத்து தொண்டர்களுக்காகவே ஒரு விழா என்பது இன்று நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா மட்டுமே.

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தலைமை வகித்து வருவார்கள். காரைக்கால் அம்மையார் போன்ற பெண் நாயன்மார்களும் உண்டு. சிவபெருமானின் கண்களில் ரத்தம் வழிந்தது என்பதற்காக தனது கண்களையே பிடுங்கி அவர் கண்ணில் பொருத்திய கண்ணப்ப நாயனார், எதிரில் நின்று போராடுபவர் திருநீறு அணிந்த சிவபக்தர் என்பதற்காக வாளையும், கேடயத்தையும் கீழே போட்ட ஏனாதி நாயனார் என்று வணங்குவதுண்டு. நாடாளுமன்ற அமைப்புகள் உருவாகி சுமார் 300 ஆண்டுகளே ஆகிறது.

ஆனால், இந்து மதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தை வலியுறுத்தி அதிகாரத்தை பரவலாக்கி பக்தர்களை ஆட்சி செய்து வருகிறது. மந்திரி சபையும், பாராளுமன்றமும், ஜனாதிபதியும் உண்டு. சிவபெருமான் பிரதமராகவும், லஷ்மி நிதிமந்திரியாகவும், சரஸ்வதி கல்வி அமைச்சராகவும், ஸ்ரீவிஷ்ணு உள்துறை மந்திரியாகவும், பிரம்மா உருவாக்கும் மந்திரியாகவும் கருதப்படுவதுண்டு. ஒருவர் பணியில் மற்றொருவர் குறுக்கிடுவதில்லை.
முப்பத்து முக்கோடி தேவர்களை கொண்ட பாராளுமன்றம் இந்திரன்சபாநாயகர், இந்திராணி துணை சபாநாயகர், எமன், காலன், தூதன் ஆகிய சிறை அதிகாரிகளை கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது.

விசுவாமித்திரர், கௌசிகர் போன்ற துறவிகளின் தலைமையில் ஆலோசனை மன்றங்களும் உண்டு. ரிசர்வ் வங்கி கவர்னர் குபேரன். அக்கவுன்ட் ஜெனரல் சித்திரகுப்தன். தவறு செய்துவிட்ட மந்திரி சபைகள் ஜனாதிபதியால் கலைக்கப்படுவதுபோல் சிவபெருமான் தலைமையிலான மந்திரி சபையும் ஜனாதிபதி பராசக்தியால் இரண்டுதடவை கலைக்கப்படுவதுண்டு. 14 வயதில் மார்க்கண்டேயன் உயிர் பிரச்னை வந்தபோது, சிவபெருமான் சட்டத்திற்கு புறம்பாக எமனை எதிர்த்து திரிசூலத்தை தூக்கிய போது, பிரதமர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டில் பராசக்தி மந்திரி சபையை கலைத்தார்.

சிவபெருமானுக்கும் அவர் மனைவியான ராணுவ மந்திரி தாட்சாணிக்கும் பிரச்னை வந்தபோது தலையிட்டு ஒரு யுகத்திற்கு மந்திரிசபையை கலைத்துப் போட்டுவிட்டார். அகலிகை பிரச்னையில் இந்திரன் தவறு செய்தபோது அவருடைய பதவியும் பறிபோனதுண்டு. மொத்தத்தில் இந்து மதம் ஜனநாயக பண்பாடுகளை காக்கின்ற மதம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் மதிக்கப்படுவதுண்டு. உழைப்புக்கு மரியாதையும், நன்றியும் உண்டு.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum