Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!

Go down

அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை! Empty அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!

Post by oviya Fri Dec 12, 2014 1:15 pm

திருவாமாத்தூர்

பசுக்கள் தன்னை வழிபாடு செய்ததன் அடையாளமாக குளம்புச் சுவட்டைத் தம் தலையில் இறைவன் தாங்கி நிற்கிறார். இந்தத் திருத்தலம், திருவாமாத்தூர். இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இந்த இறைவனை ராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பியபோது வழிபட்டிருக்கிறார் என்பது சுவையான செய்தி. இந்த சம்பவத்தை, அப்பர் பெருமான் ‘ராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்!’ என்று குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் ஆமாத்தூர் ஐயனைப் பாடியுள்ளனர்.

காமதேனு, நந்தி, பசுக்கள் ஆகியவை மற்ற விலங்குகளின் தாக்குதலை எதிர்க்க வேண்டி இறைவனைப் பல வருடங்கள் தவம் செய்து கொம்புகள் பெற்றன என்று தலபுராணம் கூறுகின்றது. இதன் காரணமாக இந்தத் தலத்திற்கு ‘தாயூர்’ என்றும், ‘ஆமாத்தூர்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்து ஈசனின் திருநாமம் அபிராமேஸ்வரர் என்பதாகும். கோயில் முதலாம் பராந்தகன் காலத்தைச் சார்ந்தது. இக்கோயிலின் உண்ணாழிப் பகுதி சதுரமாக அமைந்துள்ளது. அதிஷ்டானப்பகுதி சற்று உயர்ந்திருக்கிறது.

உண்ணாழிக்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையில் அந்தராளம் அமைந்துள்ளது. முக மண்டபத்திற்கு எதிரே மகா மண்டபம். கருவறையில் அபிராமேஸ்வரர் கிழக்கு நோக்கி பேரருள் பொழிகிறார். உண்ணாழியின் தேவகோட்டங்களில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் விமானம் ஒரு நிலை விமான மாகும். சிகரப்பகுதி புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. கோபுர நுழைவாயிலில் உயர்ந்த நிலைத் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இக்கோயிலில் மிகவும் அழகு வாய்ந்த பல்லவர் காலத்தைச் சார்ந்த மும்மூர்த்திகளின் சிற்பமும், சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் இருக்கின்றன. அபிராமேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் முத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அம்மன், ‘முத்தை வென்ற முறுவல் நாச்சியார்’ என்று வெகு நயமாக அழைக்கப்படுகிறார். விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. முத்தம்மன் சந்நதிக்கு முன் உள்ள மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்ததாகும்.

அபிராமேஸ்வரர் கோயிலில் உள்ள சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கல்வெட்டு திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு திருப்பதிகம் பாடியவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடியவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆமாம், இவர்கள் பிறவியிலேயே பார்வையற்ற வர்கள். புறக்கண்கள் இவர்களுக்கு இருந்தும் அவைகள் பயன்படாது போகவே அகக் கண்களால் இறைவனை உணர்ந்தார்கள். இதன் காரணத் தாலேயே திருப்பதிகம் பாடும் பேறு பெற்றனர்.

இவ்வாறு திருப்பதிகம் பாடும் பொறுப்பை பார்வையற்ற பதினாறு பேர் மேற்கொண்டார்கள். இவர்களுக்கு வழிகாட்டும் பணிக்கு இருவர் அமர்த்தப்பட்டனர். இந்த பதினாறு அன்பர்களும் முழு மெய்ஞானத்தை அகத்தே பெற்றிருந்தார்கள். அப்போதைய அரசும், அரசனும் இதுபோன்று உடல் குறையுள்ளவர்களுக்கு வாழ்வளிக்கத் தவறவில்லை. திருப்பதிகம் பாடுபவர்கள் பார்வையற்றவர்களாக இருந்தாலும் நன்கு கற்றறிந்தவர்கள். ஆதலால், அவர்களைப் புறக்கணிக்காமல் இறைவனுக்கு இப்படி ஒரு பணி செய்ய நியமிக்கப்பட்டார்கள்.

இந்த பதினாறு பேருக்கும் உணவுக்காக அளிக்கப்பட்ட நெல்லின் அளவு கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு, ஆள் ஒன்றுக்கு ‘பதக்கு’ நெல் வீதம் பதினெட்டு பேர்களுக்கு (பார்வையற்ற பதினாறு பேர் மற்றும் அவர்களுக்கு ‘கண் காட்டுவார்’ என்று சொல்லப்படும் வழிகாட்டிகள் இருவர்) உணவுக்காக அளிக்கப்பட்ட நெல், முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கும் மொத்தமாக ஆயிரத்து எண்பது கலம் நெல் அளிக்கப்பட்ட விவரம் அக்கல்
வெட்டில் அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளது.

(ஒரு பதக்கு என்பது இரண்டு மரக்கால், பன்னிரண்டு மரக்கால் என்பது ஒரு கலம் என்ற அளவை அக்காலத்தில் இருந்தது.) இதுதவிர இவர்களுக்கு ஆடைகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் நாம் அறிய முடிகிறது. இதைப் ‘புடவை முதல்’ என்று கல்வெட்டு குறிக்கிறது. ‘புடவை முதல்’ என்பது திருப்பதிகம் பாடுபவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் கட்டிக்கொள்ளும் துணிக்காகக் கொடுத்ததைக் குறிக்கின்றது. ‘புடவை’ என்ற சொல் துணி அல்லது ஆடை என்ற பொருளில் வழங்கி வந்திருக்கிறது.

இதைச் சிதம்பரத்தில் உள்ள ‘ஆடவல்லப் பெருமான்’ கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திரனின் 24ம் ஆட்சியாண்டு (கி.பி.11ம் நூற்றாண்டு) கல்வெட்டு குறிக்கின்றது. இதே பொருளில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் ‘புடவை’ என்ற சொல் வழங்கி வந்திருக்கின்றது. புலவர் புராணம் பாடிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி கூடிய இடத்தில் ஆலயமும், கௌமார மடமும் அமைந்துள்ளன. விழுப்புரத்திற்கு மேற்கே செஞ்சி நெடுஞ்சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் திருவாமாத்தூர் அமைந்திருக்கிறது.

குறை இல்லாத வாழ்க்கைக்கு கும்ப கலச தேங்காய்

மனித வாழ்க்கையில் சிக்கல்களும், பிரச்னை களும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சிக்கல்களே வாழ்க்கையானால்? குடும்பத்தில் பிரச்னை, தொழில், உத்தியோகத்தில் சிக்கல்கள், கல்வியில் தடை, பில்லி, சூனியம் போன்றவைகளால் கெடுபலன்கள் ஏற்படுதல் மற்றும் பூர்வ ஜென்ம கர்மாவின் பயனாக ஏற்படக் கூடிய பிரச்னைகளுக்கு உரிய பரிகாரமாகத் திகழ்வது கும்ப கலச தேங்காய். கண் திருஷ்டி மற்றும் காரிய சித்தியந்திரங்களை வைத்து கேரள நம்பூதிரிகளால் உரிய மந்திர பிரயோகங்களுடன் பூஜிக்கப்பெற்ற கும்ப கலச தேங்காயை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பெற்று மற்றவர்கள் பார்வை படும்படி வீட்டு வாசலில் கட்டி பூஜித்து வந்தால் கடன்களால் கலக்கம், பகைவர்களின் அச்சுறுத்தல் போன்ற சகல பிரச்னைகளும் தீர்ந்து குறைவற்ற மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கை அமையும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum