Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கல்விக் கடவுளர் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள்

Go down

கல்விக் கடவுளர் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள் Empty கல்விக் கடவுளர் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள்

Post by oviya on Fri Dec 12, 2014 1:16 pm

காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருப்பதற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத் தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காச்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே சாரதாபீடம் என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் கருதினார்கள். நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது.

வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் தமிழ்நாட்டில் ஒரு பாடலிபுத்திரம் இருக்கிறது. அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரமம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார்.

ஊமையாக இருந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தினால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்திற்கு சந்நதி இருக்கிறது. ஆதி ஆச்சாரியாள் காஞ்சிபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்திற்கு சாரதா மடம் என்று பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.

ஆதியிலிருந்தே காஞ்சியில் கடிகாஸ்தானம் என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிட்டிப்போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்தியார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், ஷிமோகா ஜில்லாவி ல், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது.

அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் பல்லவேந்திரபுரி'யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜ சிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷய மாகச் சொல்கிறது.

அப்பர் சுவாமிகளும் கல்வியில் கரை யில்லாத காஞ்சி என்கிறார். மூக பஞ்சசதீயின் ஆர்யா சதக சுலோகமென்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ..’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித் தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். சரத் சந்திரன் என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான்.

மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரி கையை ஆடை மாதிரிப் போர்த்துள்ளது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான வித்யை சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.

ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர் த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம். ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. 'வித்யை'என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது.

முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ணி வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார். கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன் நற்றால் தொழாஅர் எனின்? அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, நாம் வித்வான் என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும்.

இதனால்தான், நம் பூர்வீகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்து சேர்த்துச் சொன்னார்: ‘வித்யா விநய ஸம்பன்னே.’ இப்போது படிப்பு எல்லாம் லௌக்கியத்துக்காகத் தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகளைத் தெரிந்து கொண்டு வெகு சாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக் கொண்டு பெருமைப் படுகிறோம். ஆனால், அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும். அதனால்தான் ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி இரண்டு பேரையுமே வித்யா தேவதைகளாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஸரஸ்வதி, சகல கலைவாணி, வித்யா ஸ்வரூபிணி என்று எல்லோருமே அறிவீர்கள். சர்வ வித்யைகளுக்கும் பிரபு (ஈசானன்) என்றே வேதம் ஸதாசிவனான தக்ஷிணா மூர்த்தியைச் சொல்லுகிறது. பேச்சு, காரியம் அறிவது எல்லாம் அடங்கிப்போன நிலையிலிருக்கிற தக்ஷிணா மூர்த்தியே மேதா தக்ஷிணா மூர்த்தியாகிப் பெரிய புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வ சக்தி எல்லாம் தருகிறார். ஸரஸ்வதி தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிறார்கள்.

அதற்குப் பேரே கலை. கலை என்றால் எது வளருகிறதோ அது. வித்யைக்கு முடிவே இல்லை. கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு என்று ஸரஸ்வதியே விநயத்தோடு நினைக்கிறார்களாம். இவள் தலையில் வைத்திருப்பது மூன்றாம் பிறை. அது பூரண சந்திரனாக வளர வேண்டும். ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகள் அடையாளம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum