Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அட, அப்படியா! அட, அப்படியா!

Go down

அட, அப்படியா!   அட, அப்படியா! Empty அட, அப்படியா! அட, அப்படியா!

Post by oviya on Fri Dec 12, 2014 1:17 pm

கடன் தொல்லை நீங்க

சிதம்பரத்திலிருந்தும், சீர்காழியிலிருந்தும் நகரப் பேருந்துகளில் கோயிலடி பாளை யம் செல்லலாம். இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்ற பெயரும் உண்டு. தாழைமரம் தலமரமாக உள்ளது. தீர்த்தம், மகேந்திர தீர்த்தம். சம்பந்தர் பாடிச் சிறப்பித்த ஆலயம். இங்குள்ள இறைவன், திருமேனி அழகர்; இறைவி, வடிவாம்பாள். இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கடன் தொல்லைகள் விரைவில் நீங்கு வதாகச் சொல்கிறார்கள்.

கைநிறம் சிவபபு

சேலம் மாவட்டம் நாமக் கல்லில் குடைவரைக் கோயிலில் நரசிம்மர் மூலவராக வீரா சனத்தில் உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறார். இரணியன் உடலைப் பிளந்த கை என்பதற்கு ஏற்ப மூலவர் கை சிவப்பு நீரோட்டம் கொண்டதாக அமைத்துள்ள சிற்பியின் திறன் போற்றத்தக்கது.

லட்சுமணர் இல்லா ராமர் சந்நதி

தாராபுரம் காடு அனுமந்தராயர் கோயிலிலும், கேரளம் பூங்குன்றம் என்கிற புஷ்பகிரி ராமர் கோயிலிலும் மூலஸ்தானத்தில் ராமரும், சீதையும் மட்டும்தான் உள்ளனர்; லட்சுமணர் இல்லை.

விந்தையான மன்மதன்கள்

தென்காசி கோயிலில் மன்மதனுக்கு நான்கு கைகளும், தாடிக்கொம்பு கோயிலில் மன்மதனுக்கு ஆறு கைகளும் அமைந்துள்ளன.

விமானத்தில் விலங்குகள்

மதுரை சொக்கநாதர் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் ஒவ்வொரு பக்கமும் இரண்டு யானைகள் வீதம் நான்கு பக்கங்களில் எட்டு யானைகளும், பக்கத்துக்கு எட்டு வீதம் முப்பத்திரண்டு சிங்கங்களும், பக்கத்துக்கு பதினாறு வீதம் அறுபத்து நான்கு பூதகணங் களையும் காணலாம்.

மூன்று கோலங்களில் திருமால்

நின்றான், இருந்தான், கிடந்தான் ஆகிய மூன்று கோலங்களையும் திருமால் காட்டிய ருளும் தலங்கள்: திருக்கோஷ்டியூர், மதுரை கூடலழகர் கோயில், நெல்லை மன்னார் கோயில், நாகை சுந்தரராஜப் பெருமாள் கோயில், உத்திரமேரூர் சுந்தரராஜர் கோயில்.

மழலைச் செல்வம் கிட்ட

அன்னியூரில் (பொன்னூர்) பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது. ஆபத்சகாய தேவர், பெரிய நாயகியோடு காட்சி தருகிறார். எலுமிச்சை மரம் தலவிருட்சமாக உள்ளது. அப்பர் பாடிய தலம். அக்னி தீர்த்தம் கொண்டது. மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. பயணத்தில் இத்தலத்தை அடையலாம். கணவன்-மனைவி ஒற்றுமையை வளர்க்கும் தலம்; மழலைச் செல்வமும் அருள்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum