Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேர் திருப்பணி தொடக்கம்

Go down

ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேர் திருப்பணி தொடக்கம் Empty ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேர் திருப்பணி தொடக்கம்

Post by oviya on Fri Dec 12, 2014 1:34 pm

கும்பகோணம் : சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் 26வது திருத்தலமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப் பெற்றது கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசிமக திருவிழா மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவின் போது இக் கோவிலில் உள்ள 5 திருத்தேர்களான விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளி 2 நாட்கள் தேரோட் டம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 1988க்கு பிறகு இந்த 5 தேர்களும் சேதமடைந்து ஓடாமல் இருந்தன. அதையடுத்து பக்தர்கள், அறநிலையத்துறையினர் இணைந்து மீண்டும் அந்த தேர்களை புதுப்பித்து கடந்த 2002ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேரோட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 2016ம் ஆண்டு மகாமக பெருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்த 5 திருத்தேர்களின் சீரமைப்பு பணிகள் தொடங்கியதால் கடந்த மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறாமல் அதற்கு பதிலாக ஐந்து வெள்ளி ரதங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

வரும் 2015ம் ஆண்டு இளைய மகாமகமும், 2016ம் ஆண்டு மகாமகமும் நடைபெற உள்ளதால் முதலில் தொட ங்கிய சுவாமி, அம்பாள் தேர் திருப்பணிகள் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமி தேர்களின் திருப்பணி தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் செய்வது என திட்டமிடப்பட்டது. அதில் (தேர் ஒன்றுக்கு தலா ரூ.10லட்சம் வீதம்) ரூ.30லட்சம் அறநிலையத் துறையும், ரூ.30 லட்சம் உபயதாரர்கள் மூலமும் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று விநாயகர் சுவாமியின் தேர் திருப்பணி தொடங்கியது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum