Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

Go down

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா Empty வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

Post by oviya on Fri Dec 12, 2014 1:34 pm

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.4ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் 74வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்.4ல் காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா வை முன்னிட்டு தினமும் காலை, மாலைகளில் சிறப்பு பூஜை மற்றும் இரவில் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்.4ல் இரவு 8 மணிக்கு முருகன் சங்கீதா பொம்மலாட்ட குழுவினரின் பொம்மலாட்டம், ஏப்.5 காலை 10 மணிக்கு பஞ்சாமிர்த வண்ணப் பாராயணக்குழுவினரின் பாராயணம், இரவு திருவில்லிபுத்தூர் விஜயலட்சுமி குழுவினரின் பக்தி இன்னிசை, ஏப்.6 காலை 10 மணிக்கு ஆயிர வைசியரின் பூச்சொரிதல் விழா, இரவு மதுரை சத்குரு சங்கீத வித்யாலய இசைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஏப்.7ல் வார வழிபாடு, ஏப்.8 இரவு திருப்பூர் கானமுகிழ் குழுவினரின் தெய்வீக இன்னிசை, ஏப்.9 இரவு சண்முக திருக்குமரன் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு, ஏப்.10 இரவு மருங்கன் குழுவினரின் கிராமிய இசை கரகாட்டம், ஏப்.11 இரவு அவ்வை இசை பயிற்சி பள்ளியின் இன்னிசை, கலைவாணி, டாக்டர் மதுரம் அரவிந்தராஜ், காயத்ரி ஆகியோரின் பக்தி இசை, தஞ்சை ரவிச்சந்திரன் குழுவினரின் வீணை நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.12ல் மாலை 6 மணிக்கு கலைவளர்மணி லோகசுப்பிரமணியன் தலைமையில் நாகநாதபுரம் குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய திருவிழாவான பங்குனி உத்திரம் ஏப்.13ல் நடைபெறும். அன்று அதிகாலை முதல் பக்தர்கள் நொச்சியூரணியிலிருந்து காவடிகள், பால்குடம் எடுத்து வந்து வழிவிடுமுருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவர். அன்று இரவு 7.30 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.14 இரவு முருகன் அருள் சிவகுமார் குழுவினரின் நாதஸ்வர இசையுடன், வழிவிடு முருகன் திருவீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா கணேசன் செய்து வருகிறார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum