Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Go down

புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் Empty புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Post by oviya Mon Dec 01, 2014 1:57 pm

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் உள்ள சிவ சக்தி விநாயகர் கோவில் நூதன பிம்ப அஷ்டபந்தன சம்ரோகஷன கும்பாபிஷேக விழா நேற்று புதன் கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய் கிழமை அன்று காலை சுமார் 10 மணியளவில் பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர்.

பின்னர் தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தாரை, தப்பட்டைகள் முழங்க தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விநாயகர் ஆலயம் வந்து அடைந்தது. பின்னர் சிவ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

அன்றிரவு பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. புதன் கிழமையன்று காலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிவசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சிவ சக்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் காலை முதல் மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum