Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கழுகுமலையில் கந்தசஷ்டி: கழுகாசலமூர்த்தி, தாரகாசூரனை வதம் செய்தார்

Go down

கழுகுமலையில் கந்தசஷ்டி: கழுகாசலமூர்த்தி, தாரகாசூரனை வதம் செய்தார் Empty கழுகுமலையில் கந்தசஷ்டி: கழுகாசலமூர்த்தி, தாரகாசூரனை வதம் செய்தார்

Post by oviya on Mon Dec 01, 2014 2:03 pm

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கடந்த 24-ந் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் அனைத்திலும் கந்தசஷ்டி அன்று ஒருநாள் மட்டும்தான் தாரகா சூரன், சிங்கமுகா சூரன், சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மட்டும் தான் கந்தசஷ்டி திருவிழாவின் முதல் நாளில் தாரகாசூரனை சுவாமி வதம் செய்வது சிறப்பு.

அதன்படி 5-ம் திருநாளான நேற்று காலை 11 மணிக்கு கோவில் மேல வாசலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அரண்மனை வாசல் தெரு, நடுத்தெரு வழியாக வீதிஉலா சென்று, கோவில் மேலவாசலில் அமைந்துள்ள உத்தராட்ச மண்டபத்துக்கு எழுந்தருளிளார்.

பின்னர் பகல் 12 மணி அளவில் வீரபாகு மூலம் தாரகாசூரனுக்கு தூது விடும் நிகழ்ச்சி நடந்தது. ஆனாலும் தாரகாசூரன் வராததால் கோவில் மேலவாசலில் அமைந்துள்ள பந்தலுக்கு சுவாமி வந்து தாரகாசூரனை வதம் செய்தார்.

அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா“ என பக்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இரவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இன்று (புதன்கிழமை) கந்தசஷ்டியொட்டி காலையில் சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து சண்முகர் அர்ச்சனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தெற்கு வாசலில் அமைந்துள்ள பந்தலுக்கு சுவாமி எழுந்தருளி, சூரசம்ஹாரம் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இரா.தமிழ் ஆனந்தன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum