Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம்

Go down

வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம் Empty வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம்

Post by oviya on Mon Dec 01, 2014 2:16 pm

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2–ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொடி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், கலைமகள் பூஜை, மகாலட்சுமி வழிபாடு, பராசக்தி வழிபாடு, நவகிரஹ வேள்வி ஆகியவை நடத்தப்பட்டன.

பின்னர் கொடியேற்றி வைக்கப்பட்டது. நேற்று தொடங்கிய விழா வருகிற 30 –ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் தீபாராதனை, உற்சவர் சிறப்பு அபிஷேகம்,பால்குட ஊர்வலம், உலக நலன் வேண்டுதல், திருப்புகழ் விண்ணப்பம் ஆகியவை நடத்தப்படுகிறது.

விழாவின் முக்கிய நாளான வருகிற 29–ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு வால்பாறை புதிய பஸ்நிலையம் அருகில் இருந்து வாண வேடிக்கையுடன் மேள தாளம் முழங்க சூரசம்ஹார பெருவிழா நடை பெருகிறது.

தொடர்ந்து 30–ந் தேதி (வியாழக் கிழமை) முருகப் பெருமானின் திருக்கல்யாண உற்சவப் திருவிழாவும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெருகிறது.விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum