Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன்

Go down

ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன் Empty ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்த குபேரன்

Post by oviya on Tue Dec 02, 2014 1:38 pm

குபேரன் செல்வத்திற்கு அதிபதி ஆவார். பணம் படைத்த தெய்வமான திருப்பதி ஏழுமலையானுக்கே திருமணத்திற்கு கடன் கொடுத்தவர் குபேரன். நாம் திருப்பதிஉண்டியலில் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம்.

மகாலட்சுமியை மார்பிலேயே வைத்திருக்கின்ற மாதவனுக்கே கடன் கொடுத்தவர் என்றால் குபேரனுடைய பெருமைகளைச் சொல்லவா வேண்டும். மகாலட்சுமியின் அருட்கடாட்சத்தை இரண்டு பேர் மட்டுமே பெற்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் குபேரன். மற்றொருவர் தேவதச்சன்.

பணம் சம்பாதிக்க ஆடை ஆபரணங்கள் தேவையான அனைத்தையும் பெற குபேரனுடைய தயவு வேண்டும். நாடு நகரங்கள் அமைக்க ஏரி, குளம், ஆறு, கடல் முதலியவற்றை நிர்மாணிக்க தேவதச்சன் தயவு வேண்டும். அவர்கள் இருவரும் உலக மக்களுக்கு உதவட்டும் என தன்னுடைய அருட்கடாட்சத்தை வழங்கினார் மகாலட்சுமி.

குபேரன் ராவணனின் சகோதரன். அதாவது குபேரனின் தந்தையும் ராவணனின் தந்தையும் ஒருவரே. குபேரனின் விமானம் எங்கு பறந்தாலும், அவ்விமானம், தங்கம், வெள்ளி, பொன், முத்து இவைகளை சிந்திக்கொண்டே செல்லும். ரிக் வேதத்தில் குபேரனே தன தேவதையாக வருணிக்கப்படுகிறார்.

குபேரன் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தை மீது வலது காலை மடக்கி வைத்துக் கொண்டு இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு இடது கையில் சங்கநிதி, பதும நிதி அடங்கிய ஒரே கலசத்தை அணைத்துக் கொண்டு வலது கையை வலது தொடையின் மீது வைத்துக் கொண்டு சிரித்த முகத் தோடு காட்சியளிக்கிறான்.

மானிட வர்க்கத்தால் தாங்கப்படுகின்ற சிறந்த ஒளி வீசிய விமானத்தில் அமர்ந்திருப்பவர். மரகதம் போன்ற ஒளியை உடையவர். நவநிதிகளின் தலைவர், சிவபெருமானின் உற்ற தோழர். சிறந்த சக்தி மிகுந்த கதாயுதத்தை கையில் ஏந்திக் கொண்டிருப்பவர்.

பொன்முடி முதலிய ஆபரணங் களை அணிந் திருப்பவர் மற்றும் தொந்தியையுடையவர். அழகிய உருவம் கொண்ட குபேரன் விகாரமாக ஒரு தடவை மாறியதாக குறிப்புகள் உள்ளன.

பார்வதி மீது மோகம் கொண்டதால் பார்வதி சபித்ததால் குபேரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை நிறம், பெரிய வயிறு, தெற்றுப்பல் என விகாரத் தோற்றத்துடன் உள்ளவன் தான் குபேரன் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum