Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் இன்று நடந்தது

Go down

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் இன்று நடந்தது Empty கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் இன்று நடந்தது

Post by oviya on Tue Dec 02, 2014 1:51 pm

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஈஸ்வரன் என்ற சிவனை குகன் என்ற முருகன் வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் என பெயர் வர காரணம் ஆயிற்று.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரையை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி திருவாதிரையை முன்னிட்டு இன்று (15–ந் தேதி) 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கணபதிஹோமமும் அதை தொடர்ந்து மிருத்யுஞ்ச ஹோமமும் நடந்தது. 7 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது.

அதன்பிறகு காலை 9 மணிக்கு 1008 சங்கில் புனிதநீரை ஊற்றி சங்கு பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு வாகனத்தில் நடராஜர் எழுந்து அருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் எம்.கோபி தலைமையில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum