Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது

Go down

விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது Empty விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது

Post by oviya on Tue Dec 02, 2014 2:03 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா இக்கோவிலில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்கு முக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில்தான் காட்சியளிப்பார்.

ஆனால் மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்கு முகமாக விநாயகர் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum