Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மாணிக்கவாசகரைச் சிறை மீட்ட சிவன்! சரத்துக்குப் பிணை கொடுத்த அமெரிக்கா! ஐவரை விடுவித்த மோடி!

Go down

மாணிக்கவாசகரைச் சிறை மீட்ட சிவன்! சரத்துக்குப் பிணை கொடுத்த அமெரிக்கா! ஐவரை விடுவித்த மோடி! Empty மாணிக்கவாசகரைச் சிறை மீட்ட சிவன்! சரத்துக்குப் பிணை கொடுத்த அமெரிக்கா! ஐவரை விடுவித்த மோடி!

Post by oviya on Thu Dec 04, 2014 1:49 pm

மந்திரியாக இருந்து அரசனால் சிறை வைக்கப்பட்டவர் மாணிக்கவாசகர். மந்திரியை, படைத் தளபதியை, எதிர்த்தரப்பு அரசியல்வாதியை, தோற்றுப்போன ஜனாதிபதி வேட்பாளரை சிறை வைக்கும் கலாசாரம் அந்தக் காலத்திலேயே தோன்றிவிட்டது என்பது இதில் இருந்து தெரியவருகிறது.
மாணிக்கவாசகரை பாண்டிய மன்னன் சிறை வைத்தமைக்குக் காரணம் அரச பணத்தை மணிவாசகர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்பதாலாகும்.

அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தால் சிறைதான் என்பதை மாணிக்கவாசகர் பிறந்த தமிழ்நாடு இப்போதும் நடைமுறைப்படுத்தி வருவது பெருமைக்குரியது.

எனினும், எங்கள் நாட்டில் அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தப்பித்தாலும் அரசை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு சிறைக்கதவுகள் திறந்தே இருக்கிறது.

இவர்கள் தட்டாமல் கதவு திறக்கப்படும். கேட்காமல் சிறைவாழ்வு தரப்படும். தேடாமலே குற்றச்சாட்டுக்கள் தாராளமாகக் கிடைக்கும்.

எனவே மணிவாசகர் காலம் தொட்டு மகிந்த காலம் வரை சிறைப்படுத்தல் என்ற பண்பாடு தொடரவே செய்கிறது.

அப்படியானால் அதில் வித்தியாசம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். அந்தக் கேள்விக்கான விடை மாணிக்கவாசகர் சிறையில் இருந்த போது சிவனே நேரில் வந்து அவரை பிணை எடுத்தார்.

நம் நாட்டில் அமெரிக்கா அல்லது இந்தியா தலையிட்டு பிணை எடுக்கும்.

உதாரணத்திற்கு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தபோது அவரை விடுவிப்பதற்காக அமெரிக்கா கடும் பிரயத்தனம் செய்தது.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் சரத் பொன்சேகாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததான தகவல்களும் உண்டு.

அதனால் அவருக்கு விடுதலை கிடைத்தது. இதேபோல் போதைவஸ்துக் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐவரை விடுதலை செய்வதற்கு இந்தியப் பிரதமர் மோடி தலையிட்டு ஜனாதிபதி மகிந்தவுடன் தொடர்பு கொண்டு ஐவரையும் விடுதலை பெற வைத்தார்.

மணிவாசகரை மீட்க வந்த சிவன் தனித்து அவரைப் பிணை எடுப்பதை மட்டும் நோக்காகக் கொள்ளாமல், பொது நீதியை நிலைநாட்டுவதற்காகவும் வந்தார்.

சிவன் வந்த நோக்கங்களில் ஒன்று மாணிக்கவாசகர் குற்றம் அற்றவர் என்பதை மன்னனுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துவது.

இரண்டாவது; யாருமற்ற செம்மனச்செல்விக்கு அணை கட்ட உதவி செய்ததன் ஊடாக திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை உலக மக்களுக்கு தெளிவுபடுத்துவது.

மூன்றாவது; ஏதுமற்றவர்களும் இந்த நாட்டில் இருக்கும் போது, குதிரை வாங்கும் பணத்தை ஏழை மக்களுக்காக மந்திரி மாணிக்கவாசகர் செலவிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்பதை வெளிப்படுத்துவது உள்ளிட்ட பல நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது.

ஆனால், வல்லமை பொருந்திய நாடுகள் தலையிட்டு சிறை மீட்புச் செய்யும் போது சரத் பொன்சேகாவுக்கு பிணை கிடைக்கும்.

முன்னதாக இனத்தின் பெயரால் சரத் பொன்சேகாவால் சிறையில் அடைபட்ட தமிழ் இளைஞர்களுக்கு விடுதலையில்லை.

இந்தியப் பிரதமர் மோடி தலையிட்டால் அவரின் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலை.

அதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை தமிழர்களுக்கும் உரிய தண்டனை.

ஓ! இறைவா! நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு தடவையும் நதிகளைப் பெருக்கெடுக்கச் செய்ய உனக்கு எங்கு நேரம்?

ஆனாலும் அவருக்கு விடுதலை என்றால் இவருக்கும் விடுதலை என்ற தர்மத்தை நாடாளுவோருக்குப் புரிய வைக்க நீ தயங்குவது ஏன்? என்பதுதான் புரியாமல் உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum