Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

Go down

அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது Empty அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

Post by oviya on Thu Dec 04, 2014 2:23 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இதை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் தீபத்தை காண வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கிறது.

கார்த்திகை தீப விழாவிற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பு பந்தக்கால் நடப்படுவது வழக்கம். அதன்படி பந்தக்கால் நடும் விழா நேற்று அதிகாலை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்கு பூஜை செய்து அங்கிருந்து வெளியே எடுத்து வரப்பட்டது.

பின்னர் தேரடியில் உள்ள தேர்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. நவம்பர் 26-ந் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 5-ந் தேதி ஏற்றப்படுகிறது. காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து கார்த்திகை தீப விழாவுக்கான கோவிலை சுத்தம் செய்யும் பணி, சாமி வீதி உலா வரும் வாகனங்ளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி, தேர்களை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெறும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum