Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஆயுத பூஜை எப்போது செய்வது?

Go down

ஆயுத பூஜை எப்போது செய்வது? Empty ஆயுத பூஜை எப்போது செய்வது?

Post by oviya Fri Dec 05, 2014 12:39 pm

சரஸ்வதி பூஜையை நாம் கன்னி லக்னம் அல்லது சந்திர லக்னத்தில் நவமி திதியில் கும்பிட வேண்டும். மறுநாள் காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தசமி திதியில் ஆயுத பூஜை செய்ய வேண்டும்.

அந்த லக்னத்தில் அன்று எந்த சுபகாரியங்கள் செய்தாலும் அந்த வருடம் முழுவதும் சுபத்தைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கின்றது. எனவே இத்தகைய நேரங்களில்தான் நாம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய வேண்டும். சிலபேர் நேரம் இல்லை என்று இதற்கு முதல் நாளிலேயே செய்கின்றவர்களும் உண்டு.

ஆனால், நம் இஷ்டத்திற்கு கால நேரம் பார்க்காது ஆயுத பூஜை செய்யக் கூடாது. ஆயுத பூஜை அன்றுதான் ஆயுதத்திற்குப் பூஜை. எனவே, அதற்கு உகந்த நேரத்தில்தான் நாம் பூஜை செய்ய வேண்டும்.

காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் ஆயுதங்களை அலம்பி பூஜை செய்யும்போது அதற்கு சொல்ல வேண்டிய மந்திரங்களும் உண்டு. அதை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாகன பூஜைக்கு ஏற்ற நேரம்:

விருச்சிக லக்னத்திற்கு அதிதேவதை செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான்தான் வாகனங்களுக்கு அதிதேவதை. ஆகவே, வாகனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விருச்சிக லக்னத்தில்தான் ஆயுத பூஜை செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கின்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum