Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்

Go down

பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம் Empty பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்

Post by oviya on Fri Dec 05, 2014 12:50 pm

பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் ‘சூடி கொடுத்த மாலைகள்’ மற்றும் கிளிகள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மூலவர் மற்றும் உற்சவருக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலாவும், இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை தங்க கருட வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

கருட சேவை உற்சவ நிகழ்ச்சியையொட்டி ஏழுமலையான் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் ‘சூடி கொடுத்த மாலைகள்’ மற்றும் கிளிகள் 3 கூடைகளில் வைக்கப்பட்டு சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்தை பயணித்து பலத்த பாதுகாப்புடன் கார்கள் மூலம் நேற்று திருமலைக்கு வந்து சேர்ந்தன.

ஆண்டாள் சூடி கொடுத்த மாலைகள் மற்றும் கிளிகள் திருமலை பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அதிகாரிகளும் மாலைகளை ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்து சென்று வைக்கப்பட்டது.

ஊர்வலத்தில் திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால், இணை அதிகாரி கே.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரிகள் சின்னம்காரி ரமணா, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலைகள் மூலவர் ஏழுமலையானுக்கும், கருட சேவை உற்சவ நிகழ்ச்சியின்போது தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் உற்சவர் மலையப்பசாமிக்கும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட 9 வெண்பட்டு குடைகளும் திருமலைக்கு வந்து சேர்ந்தன. இந்த குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலுக்குள் வைக்கப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum