Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


துர்கா தேவி தியானம்

Go down

துர்கா தேவி தியானம் Empty துர்கா தேவி தியானம்

Post by oviya Fri Dec 05, 2014 1:09 pm

ஸ்ரீ துர்க்கா தேவியை எப்பொழுதும் தியானம் செய்யலாம். எந்த ஒரு தெய்வத்திற்கும் சில குறிப்பிட்ட காலங்கள் இருந்தாலும் அதிகாலையில் தியானம் செய்வது சிறந்த பலன்களைத் தரும். அதிகாலை என்பது காலை 4 முதல் 6 வரை உள்ள காலமாகும்.

இந்த நேரத்தில் நல்ல தூக்கத்திற்குப்பின் மனம் அமைதியாக இருக்கும். அதிகாலையாக இருப்பதால் சுற்றுப்புறங்களிலும் ஓசைகள் குறைந்து நிசப்தமாக இருக்கும். இதனால் தெய்வ ஆராதனையில் மனம் ஒன்றும். பூஜை அறையை நன்கு தண்ணீர் விட்டு கழுவியோ அல்லது ஈர துணியால் துடைத்தோ தூய்மையாக்கி, தியானம் செய்தல் வேண்டும்.

முனன்தாக தியானம் செய்யும் இடத்தில் அரிசி மாவினால் கோலமிட வேண்டும். விளக்கேற்றி வைத்து, ஸ்ரீ துர்கா பரமேச்வரியின் படத்தை உங்கள் மார்புக்கு எதிராக இருக்குமாறு உயர்ந்த பீடத்தில் வைக்கவும். அறையில் நறுமணம் கமழும் ஊதுபத்திகளை ஏற்றி வைக்கலாம்.

ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியை நினைத்து கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் அந்த பிம்பத்தைக் கொண்டு வர முயற்சிக்கவும். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் லீலைகளை, மனதில் கொண்டு வரலாம். எதிரில் துர்காவே அமர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு அவளிடம் பேசுங்கள்.

உங்கள் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் சொல்லுங்கள் நீங்கள் செய்த தவறுகளையும் அவளிடத்தில் சொல்லி மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்கள் மனம் லேசாகும். உங்களுக்கும் பராசக்தியிடம் பாசம் ஏற்படும். உங்களுடைய தேவைகளை அவளிடம் கேளுங்கள்.

தெய்வத்திடம் நாம் கேட்டு தான் பெற வேண்டுமென்பதில்லை. எனினும் நாம் தெய்வத்திடம் நாம் கேட்டு அதைப் பெறும் பொழுது அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. முதலில் ஐந்து நிமிடத்தில் தொடங்கி தினமும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இந்த சயமத்தில் வேறு பல நினைவுகள் உங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் அதனை வலுக்கட்டாயமாக விலக்காதீர்கள். விலக்குவது எளிமையாக இருந்தால் விலக்கவும்.

இல்லையெனில் சிறிது நேரம் அதன் பாதையிலேயே செல்ல விட்டு விட்டு மீண்டும் ஸ்ரீ துர்காவிடம் வாருங்கள். போகப் போக உங்கள் மனம் ஸ்ரீ துர்கா தேவியுடன் ஒன்றிவிடும். அந்நிலையில் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியை தவிர வேறு எதிலும் மனம் போகாது.

கோபம் கொண்டு வெளியேறிவிடும். யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டீர்கள். யாரையும் தவறான வார்த்தைகளால் தாக்க முற்படமாட்டீர்கள். அன்னை துர்கா தேவியே உங்கள் கனவுகளில் வலம் வருவாள். உங்கள் வாழ்க்கையை அவள் வழிநடத்திச் செல்வாள். உங்கள் துக்கங்களையும், துயரங்களையும் அவள் விரட்டியடிப்பாள்.

தியானத்தின் போது ஸ்ரீ தேவி பாகவத்தில் உள்ள தேவி துதிகளை அதன் பொருள் விளங்க மனம் உருகி சொல்லாம். அவை மிகவும் சக்திவாய்ந்தவை. தவ சிரேஷ்டர்களால் உணரப்பட்டு நமக்காக சொல்லப்பட்டவை. அவற்றின் பொருள் உணர்ந்து சொல்லுவது தான் மிக முக்கியம்.

அப்பொழுது தான் உங்கள் மனம் ஒரு நிலைபடும் துதியில் உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாவிட்டால் கவலையில்லை. அவற்றின் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் அந்த துதிகளின் பொருளை தெரிந்துக் கொள்ளுங்கள். தியானம் முடிந்தவுடன் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரிக்கு நன்றி சொல்லுங்கள்.

நாளையும் இதே நேரத்தில் இங்கு எழுந்தருளம்மா! நாம் இருவரும உரையாடலாம். எனக்கு ஞானத்தை சொல்லித்தா! என்று அன்னையிடம் கேட்டு அவளிடம் விடைபெறுங்கள். எழுந்திருக்கும் முன் உங்களால் முடிந்தவரையில் பாலோ, கற்கண்டோ, வைத்து பராசக்திக்கு நிவேதனம் செய்யுங்கள்.

ஸ்ரீ துர்காவை நமஸ்கரித்து விடைபெறுங்கள். தினமும் இந்த தியான பயிற்சியைச் செய்யுங்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி உங்கள் முன் நிச்சயம் தோன்றுவாள். அம்மா என்று அழைத்தவுடன் அவள் உங்களிடம் ஓடிவருவாள். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியை பல பாவணைகளில் வழிப்படலாம்.

குழந்தையாக, சகோதரியாக, தாயாராக, குருவாக என்று எந்த ஒரு பாவணையிலும் வழிபடலாம். உங்கள் மனம் எதில் லயிக்கின்றதோ அல்லது எதை அதிகம் விரும்புகிறதோ அந்த பாவணையில் அந்த பராசக்தியையும் நினையுங்கள்.

குழந்தைகள் மீது அதிகம் பற்றுள்ளவர்கள் ஸ்ரீ துர்காவை குழந்தையாக பாவித்து வழிப்படலாம். அவள் உங்கள் மடியில் விளையாட வருவாள். சகோதரியாக வழிபட்டால், என்றும் உங்கள் வாழ்வில் துணை நிற்பாள்.

தாயாக வழிப்பட உங்களை என்றும் காத்து ரட்சிப்பாள். குருவாக வழிப்பட உங்களுக்கு ஞானத்தையும் மோட்சத்தையும் அருள்வாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum