Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்ட புதன் பகவான்

Go down

விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்ட புதன் பகவான் Empty விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்ட புதன் பகவான்

Post by oviya Sat Dec 06, 2014 10:53 am

தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவர் புதன். இவரது அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பிரம்மதேவர் புதனை, சூரியனுக்கு அருகில் இருக்கும்படி பணித்தார். புதன் கல்விக்கு அதிபதி ஆவார்.

இவருக்கு ஞானி, ஞானி நாயகன், புத்தி தாதா, புத்தி விவர்த்தனன், தனப்பிரதன், தயாகரன், மனோகரன், விஷ்ணு ரூபி, லோகப்பிரியன், ஞானரூபன், சாந்த ரூபி, குதிரை வாகனன், வித்யாகாரகன் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. புதன் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

உடலின் நரம்பு ஆவார். நரம்பு அமைப்பு முறையில் ஆதாரமும் இவரே. பச்சை புல்லைப் போன்ற நிறத்தை கொண்டவர். பல்சுவை பிரியர். வடக்கு திசைக்கு சொந்தக்காரரான இவர், பஞ்சபூதங்களில் மண் ஆவார். புதன் பகவான் விஷ்ணுவைப் போல தோற்றம் கொண்டவர் என்று விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் கூறுகிறது.

வித்தைகளில் ஜோதிடம் புதன் பகவானுக்கு உரியது. குதிரை வாகனத்தைக் கொண்டவராக இவர், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதி. மீனம் நீச்ச வீடு, கன்னி உச்ச வீடு ஆகும். கிரகங்களில் மிகவும் சிறிய கிரகம் புதன் ஆகும்.

இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளது. பிரத்யதி தேவதை நாராயணன். புதனுடைய மண்டலம், நட்சத்திர மண்டலத்தில் இருந்து இரண்டு லட்சம் யோசனை உயரத்தில் அமைந்திருக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum