Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


வேலூர்: தீயில் எரிந்த 150 ஆண்டுகால அரசமரத்துக்கு மஞ்சள்நீர் அபிஷேகம்

Go down

வேலூர்: தீயில் எரிந்த 150 ஆண்டுகால அரசமரத்துக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் Empty வேலூர்: தீயில் எரிந்த 150 ஆண்டுகால அரசமரத்துக்கு மஞ்சள்நீர் அபிஷேகம்

Post by oviya on Sat Dec 06, 2014 11:01 am

வேலூர் சைதாப்பேட்டை கன்னிகோவில் தெருவில் 150 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் இருந்தது.

இந்த மரத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாரோ தீ வைத்துள்ளனர். இதில் அரசமரம் பாதி எரிந்த நிலையில் இருந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி புகைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எரிந்த மரத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த மரத்தின் அடிப்பகுதியில் அம்மன் சிலை இருப்பதாக கூறினார்கள். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் அங்கு அனைவரும் திரண்டனர்.

பின்னர் அம்மனை சாந்தம் செய்யும் வகையில் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு 108 குட மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அருள் வந்து இங்கு கோவில் கட்டி பூஜை செய்யும்படி கூறினார்கள். இதையடுத்து மரம் இருந்த பகுதியில் அப்பகுதி மக்கள் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum