Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


திருப்போரூர் தலம் பற்றிய 12 தகவல்கள்

Go down

திருப்போரூர் தலம் பற்றிய 12 தகவல்கள் Empty திருப்போரூர் தலம் பற்றிய 12 தகவல்கள்

Post by oviya on Sat Dec 06, 2014 11:10 am

1.திருப்போரூரில் முதன் முதலாக 1118-ல் விக்கிரம சோழன் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. பிறகு அது மண்ணில் புதைந்து போனது.

2.சிதம்பரம் சுவாமிகள் 17-ம் நூற்றாண்டின் மத்தியில் மண்ணில் புதைந்து கிடந்த கோவிலை கண்டெடுத்து மீண்டும் புதிதாக கட்டினார்.

3.முருகனை வழிபட இத்தலத்தில் சிதம்பரம் சுவாமிகள் சுரங்கபாதை ஒன்றை பயன்படுத்தினார். அந்த சுரங்கப்பாதை இன்னமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

4.திருப்போரூர் கோவில் முன்பு பிரமாண்டமான குளம் மிகவும் அழகானது. இந்த குளம் ஒருபோதும் வற்றியதே இல்லை.

5.மூலவரும், அம்மாலும் கிழக்கு முகமாக உள்ளனர். ஆனால் ஆலய நுழைவாயில் தென் திசையில் அமைந்துள்ளது.

6.கோவில் உள்பிரகாரத்திலும் வெளிபிரகாரத்திலும் பல அழகான சிற்பங்கள் உள்ளன.

7.பிரளயத்தால் ஆறு முறை அழிவைச்சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்ட கோயிலே தற்போது இருக்கிறது.

8.ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில், சுவாமியை தரிசித்து விட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால், முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.

9.கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது.

10.சுவாமிமலை, திருத்தணி தலங்களைப்போலவே இங்கும் சுவாமி எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது.

11.வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum