Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க

Go down

அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க Empty அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க

Post by oviya on Sat Dec 06, 2014 11:44 am

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சியினால் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி நம்பக்கூடியதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றது. எனினும் இந்தப் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

போர் வெற்றியின் பின்னர் அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு வாய்ப்பு காணப்பட்டது.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்டது.

இந்த பலத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை.

அரசியல் அமைப்பில் திருத்தங்கள் எந்த வகையில் செய்யப்பட்டாலும் அதற்கு ஜாதிக ஹெல உறுமய பூரண ஆதரவளிக்கும்.

அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யும் என நம்ப முடியாது.

தேர்தலின் பின்னர் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழப்பெரும, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருவதாக சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum