Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மஹிந்த பெறப்போகும் வாக்கு வீதம் பற்றி கூறும் ராஜித சேனாரத்ன

Go down

மஹிந்த பெறப்போகும் வாக்கு வீதம் பற்றி கூறும் ராஜித சேனாரத்ன Empty மஹிந்த பெறப்போகும் வாக்கு வீதம் பற்றி கூறும் ராஜித சேனாரத்ன

Post by oviya Sat Dec 06, 2014 11:52 am

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் உள்ள இலங்கை அரசியல் கட்சிகளின் பெரும்பாலான கிளை அமைப்புகளின் ஆதரவு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் 20 லட்சம் மேலதிக வாக்குகளில் தான் வெற்றி பெறப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி பிழையாக எண்ணி விட்டார் என்றே நான் நினைக்கின்றேன்.

அவருக்கு கிடைக்க போகும் வாக்குகளின் எண்ணிகையையே அவர் கூறியுள்ளார். புலனாய்வுப் பிரிவுகளின் அறிக்கையின் படி மைத்திரிபால சிறிசேன 56 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் பிரகாரம் மைத்திரிபாலவுக்கு 55 வீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கையின்படி 56 வீத வாக்குகள் பொது வேட்பாளருக்கு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் உள்ளன. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சில தினங்களில் இந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது பொது வேட்பாளருக்கு கிடைக்கும் வாக்கு வீதம் இந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதை விட அதிகம் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்?
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்
» மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்
» திருப்பதி தரிசனத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் மஹிந்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum