Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை

Go down

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை Empty சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை

Post by oviya on Sun Nov 30, 2014 1:50 pm

திருவனந்தபுரம், நவ. 25–

பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 16–ந்தேதி மாலை பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5–வது நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் சபரி பீடம் வரை வரிசையில் நின்றதை காண முடிந்தது. இதனால் 7 மணி நேரம் காத்திருந்துதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

வி.ஐ.பி.க்கள் வரிசையிலும் அதிக கூட்டம் காணப்பட்டது. இதேபோல குழந்தைகள், முதியவர்கள் வரிசையிலும் அதிக கூட்டம் இருந்தது. பிரபல மலையாள நடிகர் ஜெகதீஸ் நேற்று சபரிமலை சென்று சாமி அய்யப்பனை தரிசனம் செய்தார்.

வயதான மற்றும் நடக்க முடியாத பக்தர்களை டோலி மூலம் சபரிமலைக்கு தூக்கி செல்வார்கள். அதே சமயம் அவர்களை கீழே டோலி மூலம் கொண்டு வருவதில் சரியான பாதை இல்லாததால் அவதிப்படும் நிலை இருந்து வந்தது.

இந்த ஆண்டு பாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் டோலி மூலம் பக்தர்களை கீழே கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.3,400 வசூலிக்கப்படுகிறது. இதற்காக டோக்கனும் வழங்கப்படுகிறது.

சபரிமலை வரும் பக்தர்கள் அரவணை–அப்பம் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இவை கிடைக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 5 நாட்களில் ரூ.2 கோடியே 64 லட்சத்திற்கு அரவணையும், அப்பமும் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 43 லட்சத்திற்குதான் விற்பனை ஆகி இருந்தது. அதேபோல இதுவரை வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum