Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


ஆயுள் விருத்தி அருளும் திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி

Go down

ஆயுள் விருத்தி அருளும் திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி Empty ஆயுள் விருத்தி அருளும் திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி

Post by oviya on Sat Dec 06, 2014 1:13 pm

திருக்கடையூர் அபிராமி கோவிலின் உற்சவர் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். இத்தலத்தில் இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுஷ்ய ஹோமம், ஜன்ம நட்சத்திரம் ஆகியவை செய்கிறார்கள்.

காலசம்ஹாரமூர்த்தியை வழிபட்டால் ஏன் ஆயுள் பலம் கிடைக்கும்? என்பதற்கு ஒரு புராண கதை இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. மிருகண்டு முனிவர் ஈசனை வழிபட்டார். ஈசன் குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்க வரம் அருளினார். அக்குழந்தையின் பெயர் மார்க்கண்டேயன்.

தன்னுடைய குறைந்த ஆயுளை தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் 108 சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டான். அப்போது மார்க்கண்டேயன் 108 வது சிவதலமான திருக்கடையூர் வந்த போது எமன் அவரது உயிரைப்பறிக்க நேராகவே அங்கு வந்துவிட்டார்.

எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.

சிவபெருமான் கோபம் கொண்டு எமனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார். பிறகு மார்க்கண்டேயருக்கு நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு என்று அருளினார்.

இதை உணர்த்தும் வகையில் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று எமசம்ஹாரம் திருவிழா சிறப்பாக நடக்கும். அன்று மட்டும் கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வருவார். மிகவும் சிறப்பாக இருக்கும் இவ்விழாவில் எமனை காலசம்ஹாரமூர்த்தி சம்காரம் செய்வது தத்ரூபமாக இருக்கும்.

மார்க்கண்டேயரை காப்பாற்ற சிவபெருமான் எமனை சம்காரம் செய்ததால் காலசம்ஹாரமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் மார்க்கண்டேயருக்கு என்றும் சிரஞ்சீவியாய் இரு என்று வரம் கொடுத்ததால் இவரை வழிப்படுவோருக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக அங்கு பல யாகங்களும் செய்யப்படுகிறது.

ஜாதகத்தில் ஆயுள் கட்டத்தில் பலன் குறைந்தவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டு ஆயுள் தோஷம் விலகி ஆயுள் விருத்தி பெற்றார்கள் என்று இன்றும் பலர் சொல்வதை கேட்கலாம். ஆயுள் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து மிகவும் நல்ல பலன்களை தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum