Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


தீவினை நீக்கி நல்வழி காட்டும் நெல்லையப்பர்

Go down

தீவினை நீக்கி நல்வழி காட்டும் நெல்லையப்பர் Empty தீவினை நீக்கி நல்வழி காட்டும் நெல்லையப்பர்

Post by oviya on Sun Dec 07, 2014 9:21 am

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் திருநெல்வேலி

சிவபெருமானின் ஐந்து சபைகளில் தாமிர சபை என்பது போற்றத்தக்கது. இது திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது. இதனை தரிசிக்க அனைத்து சித்தர்களுமே வந்து நின்றனர். இந்தத் தலத்திற்கு வேணுவனம் என்று பெயர். அதனால் இத்தல ஈசனை வேணுநாதர், வேய்தநா தர், சலீவ நாதர், நெல்வேலி நாதர் என்றெல்லாம் போற்றி சித்தர்கள் தொழது நின்ற, நிற்கும் பூமி இது. அகத்தியன் என்ற சித்தர் பலகாலம் தங்கி தொழுது இன்புற்ற கோயில் இது.

‘‘வேணுநாதன் தம்மோடு
காமகோட்ட நாயகியைத் தொழுதெழுவார்
வினையும் போம் - படுமல்லலும்
போந் திண்ணமிதே’’

என்கிறார். சித்தர்கள் இத்தல அன்னையை, காந்திமதி அம்மன், திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், வடிவுடை அம்மன் என்றெல்லாம் கொண்டாடுகி றார்கள். ‘‘கருணையின் மொத்த வடிவம் மட்டும் அல்ல, நம்மை ஆட்கொள்ளும் தாய் இவள்’’ என்கின்றார், போகர்.

‘‘கருணையிளவள் கடலினும் பெரிதாகி
இன்னலை எரித்து இனிது தாயென
வேண்டுவதெல்லாம் தரும் வேத
நாயகி வடிவு கண்டு அயர்ந்தோமே’’

என்ற புலம்பலில் அன்னை வடிவுடை அம்மனின் கருணையைப் பேசுகின்றார். முப்பத்தியிரண்டு தீர்த்தங்களை உள்ளடக்கியது இந்த ஆலயம். சண்டி கேஸ்வரர் இந்த ஆலயத்தில் இன்றும் வாசம் செய்கின்றார். இவருக்குத் தனித் தேர் உண்டு.

‘‘சண்டிநாதனை கண்டேத்துவாருக்கு
ஆயுள் பலமாகுஞ் சொன்னோம்.
எண்ணிய யெண்ணமெலா மீடேறுமது
அறத்தில் அடங்கவே கண்டீர்’’

இப்படி புலம்புவது ராமபிரானுடன் நெல்லையப்பரை வழிபட வந்த அகத்தியர். ஆம், மாரீசன் என்ற அரக்கனை கோயிலின் சமீபத்தில் உள்ள மானூ ரில் வதம் செய்தபின், பிரம்மஹத்தி தோஷம் விலக்க ஸ்ரீராமர் வந்து நின்ற இடம், இந்த நெல்லையப்பர் சந்நதியே. வேதபட்டர் என்ற அந்தணரின் பெருஞ்செல்வத்தை சிவபிரான், அவனின் பெருமையை உலகுக்கு உணர்த்த மறையச் செய்தார். சிவனடியாருக்கு எது வும் ஒரு பொருட்டன்று. தனது சிவ பூஜையைத் தொடர்ந்து வந்தார். ஒருநாள் மாலைப் பொழுதில் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்ய நெற்களை சேமித்து, அவற்றை உலர்த்தினார். அப்போது திடீரென மழை பொழிந்தது. வேதபட்டர், ஓடோடிச் சென்று நெல் மழைநீரில் நனைந்து சேதப்படா வண்ணம் காக்க, அதனை அப்புறப்படுத்த ஓடினார். என்ன அதிசயம்! நெல் மீது ஒரு மழைத்துளிகூட விழவில்லை. நெல்லைச் சுற்றி மழை பெய்து நின்றது.

இந்த செய்தியை மன்னன் பாண்டியன் அறிந்து மகிழ்ந்து நெல்லுக்கு வேலியாக நின்ற சிவனின் கருணையை போற்றி, நெல்வேலிநாதனைச் சர ணடைந்தார். வேதங்கள் தம்மை தொகுத்த வியாசமா முனி தோன்றி இத்தலத்தை திருநெல்வேலி என மொழிந்தார். இதனை கொல்லிமலை கோரக்கர்,

‘‘வருண கிருபை கொண்டு நின்ற
மதியானை, மந்திரத்தால் மயக்கிட
வேதந்தனை தொகுத்தானும்
நெல்லை கோவிந்தனுமே கூடித்
தொழ யாமுந் தொழு தேத்தினமே.
புட்டி தைலத்தை வேணுநாதனுரைத்தவழி
யாக்கி அமைத்தோம் யதனை யொரு
கால் வேலி யூரானுக்கு யீயவுமெண்ணி
பொறுத்திருப்பமே’’

என்கின்றார். ராமபிரான் மாரீசனை வதம் செய்து, பின் காந்திமதி சமேத நெல்லையப்பரை தொழுதமையால், நெல்லை கோவிந்தனென போற்றப்படு கின்றார். ஆருத்ரா தரிசனத்தில் இன்றும் வியாசர் மக்களுடன் மக்களாக கலந்துகொண்டு சிவனை ஆராதிப்பதாக கொங்கணச் சித்தர் கூறுகின்றார். ஐப்பசி மாதம் ஆயிரம்கால் மண்டபத்தில் காந்திமதியம்மன் நெல்லையப்பர் திருமணம் நடைபெறுகையில்-நெல்லை கோவிந்தன், தன் சுற்றத்தோடு வந்திருந்து துதிப்பதாக, குதம்பை சித்தர் குதூகலிக்கிறார்.

‘‘ஆரண்யமலைந்து தென்னிலங்கை
மன்னன் மணிமுடி யொரு பத்தும்
கொய்து யவன் தம்பிக்கே யரசீந்து
மகுடங்கட்டி யாண்ட அயோத்திக்கரசன்
அனுமன் அணைய தம்முடன்
பிறப்புக்களுடனே தேவியொரு ஐப்பசி
யில் அருமனை மணங் கலந்தின்டிறல்
கண்டு தேவருமின் புற்றனரே’’

பிறவியெடுத்தபின் செய்த தீவினையால் ஒவ்வொருவரும் அடையும் அவஸ்தையைவிட, பிறப்பதற்கு முன் செய்த தீவினையால் படும் அவஸ்தைகள் அதிகம், என்பது விஸ்வாமித்திரர் கூற்று. தீவினை எத்துனை வலுவானதோ அதற்கேற்ப ஊழ்வினை அமைகிறது. நாம் ஐப்பசி மாதம் காந்திமதி- நெல் லையப்பரின் திருமண வைபோகத்திலோ அல்லது ஆருத்ரா தரிசன காலத்திலோ அதிக அக்கறையுடன் சங்கிலி மண்டபத்தினால் இணைக்கப்பட்ட இந்த இரு தெய்வங்களையும் சரணடைந்து கொண்டாடினால், ஊழ்வினை அழியும். வினைப் பயன் ஒழியும். இதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம். பிற மதத்தவர் இறைவனைத் தொழ தென்கிழக்கு பிராகாரத்தில் இறைவன் குடிகொண்டுள்ளான். சுவற்றில் பெரிய துவாரம் உண்டு.

ஆறுமுகப் பெருமான் வள்ளி- தேவசேனா சமேதராய் மயில் மேலிருந்து கடாட்சிக்கின்றார். பல்வேறு முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் இவர் கண்கண்ட கடவுள். மேற்கு பிராகாரத்தில், ஒரேயொரு பெரிய சூரியகாந்தக் கல்லினால் அகத்தியர் வழிகாட்ட ஆன மூர்த்தியிவர் தமை தொழுதேத்த,

‘‘மந்த பீடையொடு வாதையும்
விலகுமே - மந்த பாக்யம்
வற்றி, மாளாத் தனங்குவியுமே’’
என்கின்றார், மூலர் என்னும் சித்தர்.
‘‘காலனால் வருங்கேடு கழியும்
காலந் தன்னால் யேற்றமுண்டு கேளீர்
யெதனிலுஞ் ஜெயமுண்டு தேவர்
தங் குலங்காத்த கோவை
தொழுபவர்க்கே.’’

மிகவும் ஆபத்தான நிலையில் நோயுற்று கிடப்பாரையும் காத்து வாழ்விப்பார் இந்த ஆறுமுகன். வழக்கமாக முருகப் பெருமான்தான் விநாயகரைத் தொழுது தன் காரியங்களை ஆரம்பிப்பார். ஆனால் இந்த நெல்லையப்பர் சந்நதியில் கொலுவி ருக்கும் கணபதி, தனது தம்பி அறுமுகனைத் தொழுதபின்தான் தனது பணியை துவக்குகின்றார். ஆகவே இவரைப் ‘பொல்லாப் பிள்ளையார்’ என் றார், வியாசர். சகல திருமணத்தடைகளையும் நீக்குபவர். பயத்தை போக்குபவர். பால், கோதுமையினால் செய்த இனிப்புப் பண்டங்களை நைவேத் தியம் செய்து, ஞாயிற்றுக் கிழமைகளில் இவரைத் தொழுது வந்தால், பூர்வீக சொத்துக்கள் விருத்தியாகும். வீடு, வாணிபம் போன்றவையும் பிறர் பாராட்டும் வண்ணம் வாழ்க்கையும் அமையும் என்கின்றார், அழுகணிச் சித்தர்.

‘‘பொல்லாப் பிள்ளையாரால் ஆகாததேது
அருண நாளதனிலே அவனுக்குற்ற
நைவேதியமதனை இனிமையாக
படைத்தே சரணஞ்செய, மூதாதை
யர் தம் ஆஸ்திதன் வில்லங்கமோடி
விருத்தியுமுண்டாம். மனை கன்று
தம்மொடு வாணிபந் தழைக்கபாரே.’’

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum