Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


மண்ணெங்கும் விளங்கும் மகாசக்தி

Go down

மண்ணெங்கும் விளங்கும் மகாசக்தி Empty மண்ணெங்கும் விளங்கும் மகாசக்தி

Post by oviya on Sun Dec 07, 2014 9:41 am

முழையூர்

நான்கு வேதங்களையும் கற்றறிந்த பிரம்ம ஞானி, ஜமதக்னி. சகலருக்கும் தாம் அறிந்தவற்றை போதிக்கவும் செய்தார். அவரது மனைவி ரேணுகா, நாள்தோறும் கணவர் துயில் எழும்முன்னரே எழுந்து கொள்வாள். பர்ணசாலையின் முன்வாசலை சுத்தம் செய்துவிட்டு, மாக்கோலமிட்டு விட்டு, கணவ ரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு ஆற்றங்கரைக்குச் செல்வாள். ஆற்றில் நீராடிவிட்டு, ஆதவனை வணங்கி விட்டு, ஆற்று மணலைப் பிசைந் தெடுத்து அழகாக ஒரு குடத்தை வடித்தெடுப்பாள். அவள் கரங்கள் பட்டதுமே ஆற்று மணல் அழகான பானையாக மாறும். தினமும் அதில்தான் நீர் கொணர்வாள். ஒருநாள் பொழுது புலரும் நேரம் நெருங்கிவிட்டதால், ரேணுகா அவசர அவசரமாக எழுந்தாள்.

விடிவெள்ளியைக் காண்பதற்காக வானத்தை அண் ணாந்து பார்த்தவாறே ஆற்றை நோக்கி புறப்பட்டாள். அப்போது வான வீதியில் சித்திர ரதன் எனும் கந்தர்வன் பறந்து சென்று கொண்டிருந்தான். இதென்ன விடிவெள்ளியைப் போல் இத்தனை பிரகாசத்தோடு இருக்கிறானே என ஒரு கணம் அவள் அவனின் அழகில் வியப்பெய்தினாள். அதனால் அவள் சிந்தை குலைந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டாலும் அவள் உடல் நடுங்கியது. தனக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது என்று தனக்குத்தானே மருகினாள். பிறகு அமைதியானாள். வழக்கம்போல் ஆற்றில் நீராடிவிட்டு, கரையருகே அமர்ந்து மண்ணைப் பிசையத் தொடங்கினாள். தினமும் சட்டென்று உருவாகும் மண்குடம் அன்று மட்டும் குழைந்து சிதைந்தது.

தான் கற்புத் தவநெறியிலிருந்து பிழன்றதே இதற்குக் காரணம் என்று நினைத்து அழுதாள். இந்தத் தடுமாற்றத்திற்கு என்ன தண்டனையோ என்று பயந்தபடியே ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள். அதேநேரம் ஜமதக்னி முனிவரும் விழித்துக் கொண்டார். தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவங்களை அறிந்தார். பத்தரைமாற்றுத் தங்கமாக, பதி விரதையாக இருந்த தன் மனைவி, ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி நிலை குலைந்து விட்டாளே என்று கோபம் கொண்டார். தனது ஐந்து குமாரர்க ளையும் அழைத்தார். உடனே நதிக்கரைக்குச் சென்று தாயின் தலையைத் துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். நான்கு மகன்களும் அதெப்படி தாயைக் கொல்வது என்று தயங்கினார்கள். ஐந்தாவது குமாரரான பரசுராமர் முன்வந்தார். ஜமதக்னி முனிவர் பரசுரா மரை ஆரத் தழுவிக் கொண்டார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதாய் தன் அன்னையின் தலையையே கொய்து விட்டு வந்து தந்தையை நமஸ்கரித்து நிமிர்ந்தார். தன் ஆணையை நிறைவேற்றிய மகனைக் கண்டு மகிழ்ந்தார் முனிவர். ‘‘என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’’ என்றார். தன் மகன் என்ன கேட் பான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது; தான் கேட்டவுடன் தந்தை கொடுத்து விடுவார் என்பதை பரசுராமரும் புரிந்து வைத்திருந்தார். அவர்கள் இருவருமாக சேர்ந்து ஒரு மாபெரும் சக்தியை பூவுலகத்திற்கு கொண்டுவர முடிவு செய்திருந்தனர். அதற்கான அச்சாரமாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி மென்மையாகப் பேசினார்: ‘‘தங்கள் கட்டளையிட்டபடி என் தாயின் சிரம் கொய்து வீசி விட்டு வந்திருக்கிறேன்.

இப்போது என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்கிறீர்கள். அதனால் கேட்கிறேன், எனக்கு என் தாய் வேண்டும். வெட்டுண்ட தலை, அன்னையின் உட லோடு இணைய வேண்டும்.’’ அதுகேட்டு ஜமதக்னி மகிழ்ந்தார். ‘‘போ, உன் தாயின் சிரசையும் உடலையும் ஒன்று சேர். அவள் உயிரோடு எழுவாள்’’ என்றார். பரசுராமர் அந்த அதிகாலை இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். ஆனால், மெல்ல நிலவொளியில் பார்க்க அதிர்ந்தார். தன் தாயின் சிரசும், வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது! மகாசக்தி தான் எளிமை யாக எல்லாவிடத்திலும் அமர திருவுளங் கொண்டதற்கு இந்த சம்பவம் ஆரம்பமானது.

இப்படிப்பட்ட ஞான புத்திரனை பெற்றெடுக்க ஜமதக்னி வழிபட்ட பல திருத்தலங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள முழையூரும் ஒன்று. முனிவருக்கு பரசுராமன் என்ற அவதார புருஷனை அனுக்ரகித்த ஈஸ்வரன், இங்கே பரசுநாதராக அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியர், எட்டுப் பட்டை கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனியையும், அறிவுக் கண் திறப்பவளான ஞானாம்பிகையையும் வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.

அன்று பரசுராமரால் பூலோகத்தில் அவதரித்த சக்திதான் இன்றும் ஆங்காங்கு வெவ்வேறு பெயர்களில் அம்மனாக எழுந்தருளியிருக்கிறாள். பரசுராமர் விருத்திக் கடவுள். அவர் தாயை அழித்ததுபோன்ற ஒரு மாயை இருந்தாலும் அவளை பூலோகம் முழுவதுமே தெய்வமாக உயர்த்தினார். சக்தி வழி பாடு என்கிற மாபெரும் பாதைக்கு எல்லோரையும் திருப்பினார். பரசுராமரின் அருள் இருந்தாலே அனைத்தும் பல்கிப் பெருகும். பரசுராமர் ஜெயந்தி யன்று இந்த பரசுநாதரை வணங்க மனம் தெளியும். வளம் பெருகும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் பாதையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum