Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


அமானுஷ்ய சக்திகளை ஆட்டிப் படைக்கும் அம்மன்

Go down

அமானுஷ்ய சக்திகளை ஆட்டிப் படைக்கும் அம்மன் Empty அமானுஷ்ய சக்திகளை ஆட்டிப் படைக்கும் அம்மன்

Post by oviya on Sun Dec 07, 2014 9:48 am

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் சிறுவாச்சூர்

ஏவல், பில்லி, சூன்யம் போன்றவை உண்டா, இல்லையா? இந்த அமானுஷ்யமான சக்தி என்பது என்ன போன்ற கேள்விகள் நீண்ட நாட்களாக நம்மி டையே உலவி வருகின்றன. முனிவர்களும் சித்தர்களும் இவை உண்மையே என தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இறைவனை நேரிலேயே தரிச னம் செய்த பெரியோர்கள், சித்தர் பெருமக்கள் ஒரு போதும் பொய் மொழி உரைப்பது இல்லை. இப்படி ஏவலும் பில்லி, சூன்யமும் சேர்த்து ஒரு மனிதனை நோய் போன்றவற்றாலும் வேறு சில குடும்ப, தொழில் தொல்லைகளுக்கும் உட்படுத்தும்போது, ‘அஞ்சேல்’ என அபயம் கொடுக்கும் கோயில்தான் இந்த மதுரகாளி அம்மன் கோயில். இதனை கோரக்க சித்தர், தமது நூலில்,

‘‘ஏவலுஞ் சூன்ய வைப்பும் காற்றொடு
கருத்தாய் நின்ற கருப்பெலாம் தவிடு
பொடி சையும் எந்தை தென் மதுரை தனை
தீயிட்டாள் உறை வாச்சூர் காளியே’’

-என பேசுகின்றார். காத்து, கருப்பு எனப்படும் ஆவிகளில் இருந்து விடுவிப்பவள். ஏவல், சூன்யம் போன்ற கொடுமைகளை களைந்து அப்படி செய்ப வர்களை தண்டிப்பவள், சிறுவாச்சூரில் குடி கொண்ட காளி அம்மன் என பொருள்படும். கோவலன்-கண்ணகி கதை, தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவலன் கொலைக்குப்பின், பாண்டிய மன்னனிடம் நீதி வேண்டி நின்ற கண் ணகி, தனது அடங்கா கோபத்தினால் மதுரையை தீக்கிரையாக் கினாள். அப்போது மதுரையின் காவல் தெய்வமான மதுராபுரி தேவி, கண்ணகி முன் தோன்றி சாந்தம் செய்ய, கண்ணகியும் மதுரை விட்டு அகன்று சிறுவாச்சூர் என்ற ஊருக்கு வந்தாள். இரவு நேரம் ஆனதினால், அங்குள்ள ஒரு அம் மன் கோயிலில் தங்கி இரவை கழிக்க முற்பட, அங்கு கோயில் கொண்ட செல்லி அம்மன், கண்ணகி முன் தோன்றினாள்.

‘‘கற்புகனலான மங்காய் - இராது நீ ஏகு
இவ்விடமே: மாந்த்ரீகனால் கட்டுண்ட
யாம் வோதுதும் கேளு - அவனால் நின்
ஆவியகலுமதுவே நீ ஏக நன்றாம்’’

என்றாள். இப்படி குதம்பை சித்தர் கூறுவதன் பொருள், ‘‘கற்புக்கரசியாம் கண்ணகியே கேளு. மாந்த்ரீகன் ஒருவன் வசப்பட்டு ஏவல் செய்யும் நிலை எமக்கு வந்தது. அவனால் உனக்கு ஆபத்து உண்டு. எனவே இங்கு இராது போ...’’ என்பதாம். சினம் மேலும் பூண்ட கண்ணகி, செல்லி அம்மனுடன் சென்று மறைந்திருந்தாள். மாந்த்ரீகன் வந்து ‘‘செல்லி அம்மையே வருக’’ என ஆணையிட, நொடிப் பொழுதில் கத்தியுடன் மாந்த்ரீகன் முன் எழுந்த கண்ணகி அவனது தலையை வெட்டி சாய்த்தாள். இச்செய்தி, நாடியில்,

‘‘தாந்த்ரீகன் சிரம் சாய்ந்து புரள
சாதித்தாள் கோவலன்துணை
கொண்டதொரு பிண்டத்தை தானே
புதைப்ப பக்தருமுதைத்து பின் அன்னை
தொழ அருள் வேண்டினனே’’

-என்கிறார், அழுகணிச் சித்தர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனது சமாதிக்கு வந்து தன்னை நிந்தனை செய்த பிறகுதான் அம்மனை தொழ வேணும் என்ற வரத்தை கண்ணகியிடம் பெற்றான் அந்த மாந்த்ரீகன். இன்றும் மதுரகாளி அம்மனை தொழ வருபவர்கள், இந்த மாந்த்ரீகன் சமாதிக் குச் சென்று அவனை நிந்தனை செய்வர், சிலர் அடிப்பதும் உண்டு! பிறகு, அம்மனை தொழுவர்!

‘‘நீயே ஈண்டு கோ இல் கொள்
பெரியகிரி யாமுறைய அகல்தும்’’

-என்றாள் செல்லி அம்மன். அதாவது, ‘‘கண்ணகியே, இந்த சிறுவாச்சூரில் நீ கோயில் கொள். அருகில் இருக்கும் பெரியசுவாமி மலையில் யாம் உறைவோம்’’ என்றாள், செல்லி அம்மன்.

‘‘சோம சுங்கனிலிருப்ப மீண்டு
மீத பஞ்சம் நின்னுடனே யென
கண்ணகியும் அருள் மொழி
புகழ்ந்தனள் மெய்யாம்’’

என்கிறார், பாம்பாட்டி சித்தர். ‘திங்கள், வெள்ளி ஆகிய இரு தினங்களும் இந்த சிறுவாச்சூரில் யாமிருந்து பக்தர்கள் துக்கங்களை துடைப்போம். மீதம் உள்ள நாட்களை செல்லி அம்மனுடன் பெரியசுவாமி மலையில் கழிப்போம்’ என்று கண்ணகி சொல்வதாகப் பொருள். திங்கள், வெள்ளி நாட்களில் எப்படிப்பட்ட மாந்த்ரீகர், எவ்வளவு ஆழமாக ஏவலும் சூன்யமும் செய்திருந்த போதிலும் இந்தக் கோயிலுக்கு வந்து பொங் கல் இட்டு தொழுது சென்றால், அந்த ஏவல், பில்லி, சூன்யம் தவிடு பொடி ஆகும். இது உண்மை. தமது பக்தர்களுக்கு யாரேனும் மாந்த்ரீக வழி தீங்கு செய்ய முற்படுபவர் ஆயின், அவர்களை தண்டிப்பது இங்குள்ள அன்னை காளியின் பொறுப்பு. மதுரையில் இருந்து வந்த கண்ணகி, காளியின் இடத்தில் இருந்து இன்றும் இப்பணியை செவ்வனே செய்து வருவதால், இவரை மதுரகாளி அம்மன் என்றும், அன்னை மீனாட்சி என்றும் போற்றுகின்றனர்.

இங்குள்ள தல விருட்சம் மருதமரம். இதனை வழிபடுவோருக்கு நற்புத்திரர்கள், நல்ல உடல் சுகம், ஆரோக்யம், ஐஸ்வர்யம் சேரும். மாந்த்ரீகனின் வழி வழி வரும் சந்ததியினரே இங்கு பூஜை புரிபவர்கள். அன்னை இந்த மாந்த்ரீக சந்ததியினரை அன்றாடம் நோட்டமிடுகின்றார். யாரேனும் தீய எண்ணத்துடன் மாந்த்ரீக செயல் செய்வராயின், உடனடியாக அவர்களை தண்டிக்கின்றார். இந்த சிறுவாச்சூர் எல்லையில் எந்த பில்லி, சூன்யமும் வேலை செய்யாது. இந்த வகையான பீடையினால் பீடிக்கப்பட்டோர் பன்னிரண்டு வெள்ளிக்கிழமைகளில் மதுரகாளி அம்மனை பொங்கலி ட்டு அதிக சிரத்தையுடன் ஆராதித்தால் கண்டிப்பாக விமோசனம் கிட்டும் என்கின்றார் புலிப்பாணியார்.

‘‘சித்தரும் ஏத்துந் தேவியிம்
மதுரகாளி - ஏவலுஞ் சூன்ய
வைப்புங் கருக்கிக் காப்பாள்
ஈராறு சுக்ரா தினத்தே வெண்
பொங்கலிட்டு சாதிப்பார் சாதிப்பாரே
தரித்ரமொடு தாந்த்ரீகப் பீடையுமகன்று
உய்வரே - சொன்னோம் சிறுவாச்ச
புரியுறைவாளை யுடனடைந்து யுய்வீரே’’

சித்தர் பெருமக்களே தொழும் அன்னை மதுரகாளி. வெண்பொங்கலிட்டு அதிக அக்கறையுடன் பன்னிரண்டு வெள்ளிக்கிழமை சிறுவாச்சூர் மதுரகாளியை தொழுவார்க்கு பொன், பொருள் சே ரும். மாந்த்ரீகத்தால் வந்த பீடை அகலும் என்று பொருள் உணரலாம்.

‘‘ஏவலுஞ் சூன்ய வாதமும்
பொய் என்பர் இறையும்
இருந்ததுண்டோ என்றே வாதிடுவர்
ஆவியுமுண்டு - அடுத்தொரு பிறப்பும்
இறந்தபின் உண்டு. இருப்பதெல்லாம்
ஈசன் ஈந்த தனமென்று இரு -
சிறுவாச்சூரன்னை காவிலிருக்க குறையென்?’’

-என்கிறார், போகர். ஏவலும் சூன்யமும் பொய் என்று கலியுலகில் பேசி மகிழ்வர். இறைவனை பார்த்தவர் யார் என கேட்டு வாதில் வெல்வர் பலர். பேய் உண்டு, இறந்தபின் அடுத்த ஜன்மம் என ஒன்று உண்டு நாமும் வாழும் வாழ்வும் சுகமும், செல்வமும் இறைவன் தந்த பிச்சை என இரு எ ன்று பொருள். ஆக, சிறுவாச்சூர் அன்னை காவல் இருக்க எந்தக் குறையும் வாராது எனப் பேசுகின்றனர் சித்தர் பெருமக்கள். நாமும் ஒருமுறை மதுரகாளி அம் மனை தொழுது பிறந்த பயனை அடையலாமே! திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum