Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords


குபேர சம்பத்தை குறைவின்றி அருளும் காளிகாம்பாள்

Go down

குபேர சம்பத்தை குறைவின்றி அருளும் காளிகாம்பாள் Empty குபேர சம்பத்தை குறைவின்றி அருளும் காளிகாம்பாள்

Post by oviya on Sun Dec 07, 2014 10:01 am

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - சென்னை

சென்னையில் பிரசித்தி பெற்ற ஜார்ஜ் டவுன் என்ற இடத்தில் கம்பீரமாக எழுந்தருளி இருக்கும் அன்னை காமாட்சி அம்சமே, காளிகாம்பாள். புராண காலத்தில் இந்தக் கோயில் கடலை ஒட்டி நின்றிருக்க, பிற்காலப் பிரளய யுக சமயம், கடலில் மூழ்கிற்று என்கின்றார் கொங்கணர் என்ற சித்தர்.

“கண்டோம் அன்னை காளிகாம்
பாவை- உக்கிரமே வதனமாம் -
வாட்டம் போக்கும் விழி தம்மோடு
சூலமேந்தி கோரமென நின்றாளை
வங்கமாதா வயிற்றடக்க கண்டோமே”

-இந்த செய்யுளில் வங்கமாதா என்று வங்காள விரிகுடா கடலை குறிப்பிடுகின்றார் சித்தர் பெருமகனார். இப்போது உள்ள கோயிலில் இருக்கும் அன்னை காளிகாம்பாள், சாந்த ஸ்வரூபம். ஆயின் கடல் கொண்ட காளிகாம்பாள் உக்ர ஸ்வரூபம் எனப் புலப்படுகின்றது.

“அலைகடல் அணைந்த பின்
சித்தரெல்லாம் மானுட வடிவு
தாங்கி தோற்றிய அன்னை
சாந்த வடிவொடு சூலமேந்தியமர”

-எனப் பேசுகின்றார் கொங்கணன் எனுஞ் சித்தர். கடல், முன்னை கோயிலை எடுத்து உண்டது. பிறகு மானிட வடிவு எடுத்து சித்தர்கள் பலர் கூடி அமைத்ததே இப்போது நாம் பக்தியுடன் தொழுது வரும் காளிகாம்பாள் திருக்கோயில். புகழ், வீரம், எடுத்த காரியத்தில் முழு வெற்றி போன்றவற்றை தாமதமின்றி தரும் ஒரு தெய்வ சந்நதி இது என்கிறார் திருமூலர்.

“முடித்து தருவாள் எக்கருமந்
தனையுந் தடையின்றி - சொன்னோம்
அகம் சோர்ந்தண்டு வாருக்கு
அன்னை இவள் அருமருந்தாவது
அறிவார் வண்ணத்து பலருமே”

-எனப் பேசுகின்றார். எந்த காரியம், எத்துணை கடினமானதானாலும் மலைப்படைய தேவையில்லை. எளிதாக முடித்திட வல்லவள் இந்த காளிகாம்பாள். மனச் சோர்வு கொண்டவருக்கு நல்ல தெளிவை ஆக்கி தரும் ஒரே தெய்வம் இந்த காளிகாம்பாள், என சித்தர்கள் போற்ற நிற்கும் தெய்வம். ஒருமுறை ஏவல், பில்லி சூனியத்தால் மிகுந்த சங்கடங்களை அனுபவித்தார். மராட்டிய மன்னர் வீர சிவாஜி. சித்தர் பெருமக்களால் ஆக்கிய தற்போதுள்ள மகாமேரு மேல் ஆட்சி செய்யும் அன்னை காளிகாம்பாளை தரிசனம் செய்ய வந்தார். மனம் விட்டு பிரார்த்தித்த மராட்டிய மன்னனாம் வீர சிவாஜியை பீடித்த துஷ்ட பேய்களும், அஞ்சனங்களின் தீய சக்திகளும் (கண் திருஷ்டிகளும்) அகன்றன. அன்று தொட்டு இஸ்லாமிய பேரரசுடன், சற்று சுமுகமான சூழலில் அரசாட்சி நடைபெற்றது. மராட்டிய மன்னன் சிவாஜி, சத்ரபதி சிவாஜி என பாராட்டப்பட்டது. அன்னை காளிகாம்பாளின் அருள் பெற்ற பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

“ராயக்காட்டு வேந்தனின் ஏவலுஞ்
சூன்யமு மறுத்து சயசிங்கிடமு வுறவு
அமைத்தாள் காளிகாம்பாளே”

-என்கிறார் மருதநாட்டு சித்தர். ராயக்காடு என்பது ராய்காட் என்ற சத்ரபதி சிவாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட தலைநகர். ஜய்சிங் என்பவர், மன்னர் ஔரங்கசீப்பின் படைத் தளபதி. இருவருக்கும் இடைக்கால நட்பு தோன்றி, பகை மறைய காரணமானாள் என்று பேசுகிறது நாடி. கவிமணி சுப்பிரமணிய பாரதியார் பற்பல பாடல்களை இயற்றி தமிழர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு இன்றும் வாழும் தன் நிகர் இல்லா கவி. “யாதுமாகி நின்றாய் காளி நீ” என்று காளிகாம்பாளை போற்றி தொழுது பண் இசைத்தவர். வெள்ளையன் இவரை பிடிக்க பலவித பிரயத்தனங்களை செய்தான். காளிகாம்பாள் அவரை காத்து நின்றாள்.

உற்சவர் பெரிய நாயகியை முழுமதியாம் பவுர்ணமி அன்று எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி தொழுதால் ஐஸ்வர்யம் பெருகும். துரதேச பிரயாணம் கிட்டும். வாராக்கடன் வந்தண்டும் என கொண்டாடுகின்றார் தாயுமானவர் எனுஞ் சித்தர்.

“வாராக் கடனை வசூலித்து
ஈவாள் நம் காளிகாம்பை
ஐஸ்வர்யஞ் சேர்ப்பாள் -
நாடு தாண்டி திரவியம் கூட்ட
கருவாவாளே”

-என்பது வாக்கு.மேலும் அவர்,

“கனியில் தீபமது செய்து
மதி முழுது ராப்போது மேரு
முன்னுரை யிக்காளியை
தொழுவார் தம் வினை யகலுமே”

-என்று எலுமிச்சம் பழ விளக்கின் பெருமையையும், முழுமதியாம் பவுர்ணமி பூஜையின் பெருமையையும் பேசுகின்றார்.

“நாக தோஷமொடு
விவாக தோஷமுமோடும்
தாரித்ரியமது தானே
நாசமாகும் நன்று நவராத்ரி
பூசை புரிந்து நிற்பார்
தமக்கே காளி கிருபை
பெருங்கருணையால் கிட்டுமே”

-என்கிறார் கோரக்கர். இக்கோயிலில் உள்ள விராடி விஸ்வ பரப்பிரம்மாவின் அருளால், அறியாது நம் குலத்தில் ஏற்பட்ட துர்மரண தோஷங்களும், பிரம்மஹத்தி தோஷங்களும் வேருடன் களையப்படும். வசந்த நவராத்திரியில் அன்னை காளிகாம்பாளை சண்டி ஹோமம் செய்து ஆராதிப்பவர். தன் மனையில் ஆஸ்தி - குபேர சம்பத்து குறைவின்றி கூடும் என்கின்றார் ஒட்டக் கூத்தர். அகோர வீரபத்திர சுவாமியை பவுர்ணமி அன்று மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களால் ஆராதித்து, வெற்றிலை மாலை சாத்தி தொழுவாருக்கு அரசாங்க பயம் விலகும். கொடிய நோய்களும், பீடைகளும் அண்டாது. கொண்டைக்கடலை மாலை சாத்தி ஆராதிப்பவர்கள் நல்ல மணாளனை அடைவார்கள். வீடு, வியாபார ஸ்தலம் போன்றன செழிக்கும் என்கின்றார் அகஸ்திய முனிவர்.

“கல்வி மேன்மை சேரும்
காசினியில் வேந்தென
பேரெடுத்து வாழலாமே-கதிர்காம
முருகனை கண்டாராதிப்போருக்கு
வளமோங்கும் வாய்மொழி மெய்யே”

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum